வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவோம் - ஜம்இய்யத்துல் உலமா

Share it:
ad
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவோம்.

அன்புடையீர்,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹ்

தொடர்ந்து சில நாட்களாக நாட்டில் பெய்து கொண்டிருக்கும் பெருமழையின் காரணமாக, நாட்டின் பல பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கேட்பட்டிருப்பதால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உதவிகள் தேவைப்படுவதனால்,  அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிராந்தியக் கிளைகளும், மஸ்ஜித் நிர்வாகிகளும் இணைந்து தமது பகுதிகளில் பாதிக்கப்பட்டோருக்கு முடிந்த உதவிகளைச் செய்வதற்கான ஏற்பாடுகளை; மேற்கொள்ளுமாறும், இதற்கு பொதுமக்கள், நலன் விரும்பிகள், தனவந்தர்கள் தம்;மால் இயன்ற உதவி, ஒத்தாசைகளைச் செய்யுமாறும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சமூக சேவைக்குழு அன்புடன் வேண்டிக்கொள்கின்றது.

பாதிப்படைந்தவர்கள் இயல்பு நிலைக்கு மிக விரைவில் திரும்ப அல்லாஹ்வைப் பிரார்த்திப்பதுடன், மழை தேவையை விட அதிகரித்தால் ஓதும் பின்வரும் துஆவை அதிகாமாக ஓதிக்கொள்ளுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சகல முஸ்லிம்களையும் கேட்டுக்கொள்கிறது.

اللهُمَّ حَوالينَا وَلَا عَلَيْنَا، اللهُمَّ عَلَى الْآكَامِ، وَالظِّرَابِ، وَبُطُونِ الْأَوْدِيَةِ، وَمَنَابِتِ الشَّجَرِ – صحيح مسلم -897

அஷ்-ஷைக் அப்துல் முக்ஸித் அல்-பாஸி
செயலாளர் – சமூக சேவைக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
Share it:

Post A Comment:

0 comments: