நான் பின்பற்றும் குடும்ப அரசியல் என்பது, முழு நாட்டையும் எனது குடும்பமாக கருதுவதே - மஹிந்த

Share it:
ad
தனது மூன்றாவது பதவிக் காலத்தில் பிளவுபடாத இலங்கையை உறுதி செய்வதுடன், புதிய அரசமைப்பொன்றை அறிமுகம் செய்வதாக  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச உறுதியளித்துள்ளார்.

இன்று 23-12-2014 கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டைத் துண்டாடுவதற்கு சர்வதேச, உள்நாட்டு சக்திகள் விரும்புகின்றன. இந்த சக்திகளுக்கு நான் சிறிதளவும் இடமளிக்கமாட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தனது மூன்றாவது ஆட்சிக்காலத்தில் புதிய அரசமைப்பொன்றை அறிமுகப்படுத்தவுள்ளார் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அனைவரினதும் ஆதரவுடன் நான் புதிய அரசமைப்பொன்றை உருவாக்குவேன்.

ஏனைய கட்சிகளுடன் எனக்கு உடன்பாடு கிடையாது. மஹிந்த சிந்தனை என்ற ஒன்று மாத்திரமே எனது நிலைப்பாடு. இது தேர்தலுடன் மறக்கப்படும் வாககுறுதியல்ல எனவும் குறிப்பிட்டார்.

நான் குடும்ப அரசியலை பின்பற்றுகிறேன் என்று எதிரணியினர் தெரிவிக்கின்றனர். நான் பின்பற்றும் குடும்ப அரசியல் என்பது முழு நாட்டையும் எனது குடும்பமாக கருதுவதே.- எனவும் தெரிவித்துள்ளார்.

Share it:

WadapulaNews

No Related Post Found

Post A Comment:

0 comments:

Also Read

வாழைச்சேனை கடதாசி ஆலையில், மஹிந்த ஆதரவு பொருட்கள் மீட்பு (படங்கள்)

-அனா-வாழைச்சேனை கடதாசி ஆலையின் விடுதிகளில் பொதி செய்யப்பட்ட நிலையில் உலர் உணவுப் பொதிகளும் பாடசாலைப் பை மற்றும் முன்னாள்

WadapulaNews