முஸ்லிம் நாடுகளில் நல்லாட்சியைக் காணமுடியுமா..? ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

Share it:
ad
நடந்து முடிந்த க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் கணிதப் பிரிவில் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த மாணவனொருவனே முதலாவது இடத்தைப் பெற்றுள்ளான். எல்.ரீ.ரீ.ஈ. இருந்திருந்தால், இந்த மாணவர்களுக்கு கல்வி கற்க வாய்ப்பு கிட்டியிருக்குமாவென கூட்டுறவு மற்றும் உள்ளூர் வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கேள்வியெழுப்பியுள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள மாணவர்கள் இன்று தெற்கிலுள்ள மாணவர்களைப் போன்றே சுதந்திரமாக பாடசாலைக்குச் சென்று கல்வி நடவடிக்கைகளை தொடர் ந்து முன்னெடுக்கின்றனர். நல்லாட்சி என்பது இதுதான். மைத்திரி பால சிறிசேனவுக்கு நல்லாட்சி என்றால் என்னவென்று தெரியாது போலும் எனவும் அமைச்சர் ஜோன்ஸ்டன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ள தாவது, 

மைத்திரிபால சிறிசேனவிடம் இப்போது சென்று நல்லாட்சி என்றால் என்னவென்று கேள்வியெழுப்பினால், நிச்சயமாக அவரால் கடதாசியைப் பார்க் காமல் பதில் கூற முடியாது என்பதனை நான் பொறுப்புடன் தெரிவிப்பேன். ‘நல்லாட்சி’ என்ற வசனத்தை மட்டுமே இவர்கள் அறிந்து வைத்துள்ளார்கள்.

‘நல்லாட்சி’ தற்போது இலங்கையில் இருக்கும் ஒரு விடயமாகும். சந்திரிக்கா மற்றும் ரணிலின் ஆட்சிக் காலத்தில், ‘நல்லாட்சி’ இருக்கவில்லை. அமெரிக்கா நல்லாட்சியை உருவாக்க எத்தனித்த அனைத்து நாடுகளும் இன்று மரண வீடுகளைப் போலவே உள்ளன. ஈராக், பஹ்ரைன், எகிப்து, லிபியா மற்றும் சவூதி அரேபியாவில் நல்லாட்சியுண்டா? குவைத்தில் நல்லாட்சியைக் காணமுடியுமா அல்லது ஆப்கானிஸ்தானில் நல்லாட்சியு ண்டா? சந்திரிக்காவின் காலத்தில் நல்லாட்சியிருந்ததா? அல்லது ரணிலின் ஆட்சியின் போது நல்லாட்சியிருந்ததா? அப்போது இருந்த நிறுவனங்களை விற்று திருடியது சந்திரிக்காவும் ரணிலும்தான்.
Share it:

Post A Comment:

0 comments: