மைத்திரியின்ன் பிரசித்தம் அதிகரிப்பு, கிராம மட்டங்களில் மஹிந்தவுக்கு செல்வாக்கு

Share it:
ad
பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் பிரச்சாரம் தொடர்பில் நாள் தோறும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் வீட்டில் இரகசிய மீளாய்வு சந்திப்புக்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது பொதுவேட்பாளரின் தற்போதைய பிரச்சாரங்களும் 2010ஆம் ஆண்டு முன்னாள் இராணுவ தளபதி சரத்பொன்சேகாவின் பிரசாரங்களும் ஒத்துப்பார்க்கப்படுகின்றன.

இந்தக்கூட்டங்களில் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்று வருகின்றனர்.

இதுவரைக்கும் இடம்பெற்ற மீளாய்வுகளின் அடிப்படையில் சரத்பொன்சேகாவை காட்டிலும் மைத்திரிபாலவின் பிரசித்தம் அதிகரித்துள்ளது.

எனினும் கட்சி மாறல்கள் காரணமாக ஏற்படும் பிரசித்தம் தற்போது குறைந்துவருவது மீளாய்வின்போது கண்டறியப்பட்டுள்ளது.

பிரசாரக்கூட்டங்களுக்கு வருவோரை கொண்டு வெற்றியை கணிப்பிட முடியாது.

எனினும் மைத்திரிபாலவின் கூட்டங்களுக்கு கணிசமான எண்ணிக்கையானோர் வருகின்றனர்.

அதேநேரம் வீட்டுக்கு வீடு சென்று மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்கள் நல்ல பயனை தரும் என்று மீளாய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனெனில் இன்னும் கிராம மட்டங்களில் மஹிந்த ராஜபக்சவின் பிரசித்தம் அதிகரித்து காணப்படுகின்றமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது மைத்திரிபாலவின் பிரச்சாரம் இன்னமும் கிராமமட்டத்துக்கு உரியமுறையில் சென்று சேரவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க அரசாங்கத்துடன் சேர்ந்தமையானது அந்தக்கட்சியின் கிராம மட்ட செல்வாக்கில் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

எனினும் சஜித் பிரேமதாஸவின் பிரசாரம் மூலம் கிராமப் புறங்களின் செல்வாக்கை மைத்திரிபாலவுக்கு திருப்பிக் கொள்ள முடியும் என்றும் மீளாய்வின்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Share it:

Post A Comment:

0 comments: