'முஸ்லிம் காங்கிரஸ், தனது அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக பொதுபல சேனா மீது குற்றம் சுமத்துகிறது'

Share it:
ad
(அஸ்ரப் ஏ சமத்)

நேற்று லண்டன் பீ.பீ.சி சந்தேசிய - சிங்கள செய்தி சேவைக்கு ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் பிரதிச் செயலாளர் நிசாம் காரியப்பர் வழங்கிய செய்திக்கு இன்று பீ.பீ.சி. சந்தேசியவில் பொதுபலசேனா பிரதான நிறைவேற்று அதிகாரி கலாநிதி திலாந்த விதானகே பதிலடி –

கலாநிதி திலந்த விதானகே - நேற்று பீ.பீ.சி செய்தியில் நிசாம் காரியப்பர் தெரிவித்த கருத்தைக் நாங்கள் கேட்டு மிகவும் மனவருத்தம் அடைந்தோம். அவர் தெரிவித்;த கருத்தை நாங்கள் ஒருபோதும் இந்த காலகட்டத்தில எங்கும் தெரிவிக்கவில்லை.

நிசாம் காரியப்பர் சொல்லிய கருத்தாவது – தற்போதைய ஜனாதிபதி மஹிந்தவுக்கு முஸ்லீம்கள் வாக்களிக்காவிட்டால் 1915ல் நடைபெற்ற பௌத்த முஸ்லீம் கலவரம் ஒன்று நடைபெறும் என பொதுபலசேனா பகிரங்கமாக சொல்லியிருப்பதாகவும் அதனால் இக்காலகட்டத்தில் முஸ்லீம்கள் மிகவும் அச்சத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
திலந்த விதானகே- நாங்கள் ஒருபோதும் அவ்வாறாக எங்கும் சொல்லவில்லை. நாங்கள் யாருக்கும் தேர்தலுக்காக ஆதரவு தெரிவிக்கவும் இல்லை. நிசாம் காரியப்பர் எனது பாடசாலை  நண்பர். 

அவர் இவ்வாறு  தெரிவித்திருப்பது அவர்களது  முஸ்லீம் காங்கிரசின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கும் அவர்களது வாசிகளுக்குமே இவ்வாறான தவறான கருத்தை  நாட்டு மக்களிடையே பரப்பி பொதுபலசேனாவைக் குற்றம் சுமத்துகின்றனர். இதனை அவர்கள் திட்டமிட்டு ஏற்படுத்தி கதை கட்டுகின்றனர். அதற்காக பொதுபலசேனாவைப் பயண்படுத்துகின்றனர்.

முஸ்லீம்கள் விடயத்தில்   தீவிரமாக உள்ள திரு தஹ்லானுடனும்  நான் பேசினோம் இவ்வாறு நிசாம் காரியப்பர் சொல்லியிருக்கின்ற கருத்தை பொதுபலசேனா எங்காவது சொல்லியிருந்ததை நீங்கள் அறிந்தீர்களா எனக் கேட்டதற்கு  அவர் அப்படி பொதுபலசேனா சொன்னதாக நான் எங்கும் கேள்விப்படவில்லையெனவும தெரிவித்திருந்தார். 

Share it:

Post A Comment:

0 comments: