திருடுவதற்காகவோ அல்லது கொலை செய்வதற்காகவோ நாம் ஒன்றிணையவில்லை - சந்திரிக்கா

Share it:
ad
சிறீலங்கா சுதந்திரக் கட்சி, மக்களின் கட்சி என்ற நிலைமையில் இருந்து தற்போது மாறியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவிக்கின்றார்.

தொம்பே பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைக் கூறினார்.

சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இன்று என்ன நடந்துள்ளது. திருடர்கள், கெஸினோ சூதாட்டக்காரர்கள் மற்றும் சாராய முதலாளிமார் இதில் உள்ளனர். குறிப்பாக மிகப் பெரிய இரண்டு சாராய முதலாளிமார்கள் அமைச்சர்களாக உள்ளனர்.

இதன் காரணமாக சுதந்திரக் கட்சி திருடங்களின் இடமாக மாறியுள்ளது. இந்தக் கட்சி மக்களின் கட்சி என்ற நிலமை இன்று மாறியுள்ளது. இது தற்போது மக்களின் கட்சியல்ல. எனவே சுதந்திரக் கட்சியியை அதிலிருந்து மீட்டெடுக்க வேண்டிய தேவை எமக்குள்ளது. அதற்காகவே நாம் அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம்.

குறிப்பாக இதனுடன் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்துள்ளது. பொது முன்னணியின் அரசாங்கம் ஒன்றையே மஹிந்த முன்னெடுக்கின்றார். அத்துடன் மஹிந்தவின் அரசாங்கத்தில் 67 பேர் ஐக்கிய தேசியக் கட்சியின் அதாவது யானை சின்னத்தில் வெற்றி பெற்றவர்கள். எனவே நாமும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைவதில் பிரச்சினை இல்லையல்லவா?  திருடுவதற்காகவோ அல்லது கொலை செய்வதற்காகவோ நாம் ஒன்றிணையவில்லை. இந்த நாட்டை முன்னேற்று வதற்காகவே ஒன்றிணைந்துள்ளோம்.
Share it:

Post A Comment:

0 comments: