பாகிஸ்தான் தலிபான்களின் தாக்குதலுக்கு, ஆப்கானிஸ்தான் தலிபான்கள் அனுதாபம் தெரிவிப்பு

Share it:
ad

பாகிஸ்தானின் வடமேற்கு நகரான பெஷவரில் பொரும்பான்மை சிறுவர்கள் உட்பட 141 பேர் படுகொலை செய்யப்பட்ட தாக்குதலுக்கு மூன்று நாள் துக்க தினம் அனுஷ்டிக்கப்படுவதோடு நாடெங்கும்; தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன. பாடசாலை மீது நடத்தப்பட்ட தாக்குத லில் கொல்லப்பட்டவர்களில் 132 சிறுவர்கள் மற்றும் 9 பணியாளர்கள் அடங்குகின் றனர். கொல்லப்பட்டவர்களது உடல்கள் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.

பாடசாலைக்குள் ஊடுருவிய ஆயுததாரிகள் ஒவ்வொரு வகுப்பறையாகச் சென்று மாணவர்களை சுட்டுக்கொன்றுள்ளனர். பாகிஸ்தான் தலிபான்கள் பெறுப்பேற்றிருக்கும் இத்தாக்குதல் அந்நாட்டு வரலாற்றில் மிக மோசமான சம்பவமாக பதிவாகியுள்ளது.

இந்த தாக்குதல் சர்வதேச அளவில் பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. மூன்று நாள் துக்க தினத்தை பிரதமர் நவாஸ் 'ரீப் பிரகடனம் செய்துள்ளார். அத்துடன் தீவிரவாத விவகாரத்தில் மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு இருந்த இடைக்கால தடையையும் பிரதமர் அகற்றியுள்ளார். பாகிஸ்தான் இராணுவம் வெளியிட்ட அறிவிப்பில், ஆயுததாரிகள் மீது கைபர் மற்றும் வடக்கு வசிரிஸ்தான் பகுதிகளில் வான் தாக்குதல்களை நடத்தியதாக குறிப்பிட்டுள்ளது. எனினும் இது பாடசாலை தாக்குதலுக்கு பதிலடியாக நடத்தப்பட்ட தாக்குதலா என்பது உறுதி செய்யப்படவில்லை. தலிபான்களுக்கு எதிராக பாக். அரசு கடந்த ஜ_ன் மாதம் தொடக்கம் தீவிர இராணுவ நடவடிக்கையை முடக்கி விட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவத்திற்கு பதில் கொடுப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த நவாஸ்  அனைத்து கட்சிகளையும் ஒன்று கூட்டியுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இந்த தாக்குதலில் ஏழு தலிபான்கள் பங்கேற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் குண்டு அங்கிகளையும் அணிந்திருந்தனர். பாடசாலையின் பின்புறமாக இருக்கும் கம்பி வேலியை வெட்டியே அவர்கள் அங்கு நுழைந்துள்ளனர். இதன்போது ஆயுததாரிகள் பாடசாலை கேட்போர் கூடத் தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

தொடர்ந்து இராணுவத்தால் நடத்தப்படும் அந்த பாடசலையின் ஒவ்வொறு வகுப்பறையாக சென்ற ஆயுததாரிகள் அங்கிருந்த மாணவர்களை கண்மூடித்தனமாக சுட்டுள்ளனர். கண்ணில் காணும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை அவர்கள் சுட்டார்கள் என்று உயிர் தப்பிய ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில்  இராணுவ பொதுப்பாடசாலை எட்டு மணி நேரம் முற்றுகையில் இருந்தது. இங்கு கல்வி கற்கும் மாணவ, மாணவியர் சிவில் மற்றும் இராணுவ பின்னணி கொண்டவர்களாவர்.

இதன்போது பாதுகாப்பு படையினர் நூற்றுக் கணக்கானோரை பாதுகாப்பாக வெளியேற்றினர். எனினும் இந்த தாக்குதல்களில் மொத்தம் 125 பேர் காயமடைந்ததாக இராணுவம் குறிப்பிட்டுள்ளது. தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அனைவரையும் தாம் கொன்றுவிட்டதாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு நியாயம் கூறி அறிக்கை வெளியிட்டிருக்கும் பாகிஸ்தான் தலிபான்கள் தம்மீதான அரசின் இராணுவ நடவடிக்கைக்கு எதிராகவே இந்த தாக்குதலை நடத்தியதாக தெரிவித்துள்ளனர். அந்த தாக்குதல்களில் தங்களது குடும்பங்களும் பாரிய இழப்பை சந்தித்ததாலேயே பாடசாலை இலக்கு வைக்கப்பட்டதாகவும் தலிபான்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இராணுவத்தினரின் வயது வந்த புதல்வர்கள் மற்றும் இராணுவத்தினரே இந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக தலிபான் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் கொல்லப்பட்ட குழந்தைகளின் புகைப்படம் ஒன்றையும் இணைத்திருந்தனர். இந்த குழந்தைகள் இராணுவ தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்கள் என்று தலிபான்கள் குறிப்பிட் டுள்ளனர். தலிபான்கள் மீதான பாகிஸ்தான் முன்னெடுத்திருக்கும் இராணுவ நடவடிக்கை யில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதன்போது இராணுவம் தமது குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரை கொல்வதாகவும் தமது வீடுகளை தீக்கிரையாக்குவதாகவும் தலிபான்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தொடக்கம் தாக்குதலில் கொல்லப்பட்டோ ரது உடல்கள் அடக்கம் செய்யப்பட்டு வருகின்றன. பாடசாலை கேட்போர் கூடத்தில் ஆயுததாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்திய போது 10 ஆம் தரத்தில் படிக்கும் முஹமது ஹிலால் என்ற மாணவனின் கை மற்றும் கால்களில் மூன்று துப்பாக்கிச்சூடுகள் பட்டுள்ளன. "நான் சற்று நினைவிழந்திருந்தேன். நான் கனவு காண்பதாகவே நினைத்தே. நான் நகர முயன்ற போதும் செயல்பட முடியாதவனாக உணர்ந்தேன். அப்போது தான் என் மேல் இருவர் வீழ்ந்து கிடப்பதை புரிந்துகொண்டேன். அந்த இரு சிறுவர்களும் இறந்திருந்தனர்" என்று மருத்துவ மனையில் வைத்து குறிப்பிட்டுள்ளார்.

இந்த தாக்குதலில் நான்கு துப்பாக்கிக் காயங்களுக்கு முகம்கொடுத்த 45 வயது சுல்பிகார் அஹமட் அந்த பாடசாலையின் கணக்கு பிரிவுக்கு பொறுப்பான ஆசிரியராவார். தனது வகுப்பறையில் 18 மாணவர்களும்; உயிர் தப்பவில்லை என்பதை அவரால் நம்ப முடியாதுள்ளது. கொல்லப்பட்ட 132 சிறுவர்கள் 12 முதல் 16 வயதுக்கு இடைப்பட்டவர்களாவர். கொல்லப்பட்டவர்களுக்கு உலகின் பல இடங்களிலும் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இந்திய பாராளுமன்றம் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தியது. இந்தியா சார்பில் அந்நாட்டு பிரதமர் நரேந்திரா மோடி ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்தார்.

"காட்டுமிராண்டிகளால் கட்டவிழ்த்துவிட்ட தேசிய துயரம்" என்று குறிப்பிட்டிருக்கும் நவாஸ் 'ரீப், இதற்காக பழிவாங்கப்படும் என்று உறுதி அளித்தார். "இன்று சிந்தப்பட்ட குழந்தைகளினது ஒவ்வொரு இரத்தத் துளிக்கும் பழிதீர்க்கப்படும்" என்று அவர் குறிப்பிட்டார். ஆனால் ஆப்கான் தலிபான்கள் இந்த தாக்குதலை இஸ்லாத்திற்கு முரணானது என்று சாடியுள்ளது. ஆப்கான் தலிபான்களும் உள்நாட்டில் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்த இரு தலிபான் அமைப்புகளும் ஒரே சிந்தனை போக்கையே கொண்டுள்ளன.

எனினும் ஆப்கான் தலிபான் பேச்சாளர் சபியுல்லாஹ் முஜhஹித் குறிப்பிடும்போது, பெ'hவர் தாக்குதலில் கொல்லப்பட்ட குழந்தைகளின் பேற்றோருக்கு தனது அனுதாபத்தையும் கவலையையும் தெரிவித்துள்ளார். "அப்பாவி மக்கள், குழந்தைகள் மற்றும் பெண்களை வேண்டு மென்றே கொல்வது இஸ்லாத்தின் அடிப் படைக்கு முரணானதாகும். இந்த அடிப்படை அனைத்து இஸ்லாமிய தரப்புகள் மற்றும் அரசுகளுக்கு பொருந்தும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

தீவிரவாதிகள் மற்றுமொரு முறை தனது அநாகரீகத்தை வெளிக்காட்டி இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா குறிப்பிட்டுள்ளார். இது ஒரு கொ^ரமான கோழைத்தனமான செயல் என்று ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் குறிப்பிட்டுள்ளார்.
Share it:

Post A Comment:

0 comments: