பாடசாலை மீதான தலிபான் தாக்குதலில் இரு கால்களிலும் குண்டடிபட்ட நிலையில் மரணித்தது போன்று நடித்து உயிர்தப்பியது குறித்து பதின்ம வயது மாணவன் ஒருவன் விபரித்துள்ளான்.
பெ'hவர் நகரில் இருக்கும் லேடி ரீடிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 16 வயது 'hருக் கான் என்ற மாணவன் அதிர்ச்சியுடன் தனது அனுபவங்களை விபரித்திருந்தார். துணைப்படையின் சீருடையை அணிந்து நான்கு ஆயுததாரிகள் பாடசாலை கேட்போர் கூடத்தில் தாக்குதல் நடத்தும்போது 'hருக் கானும் அங்கு வாழ்க்கை வழிகாட்டி பயிற்சியில் இருந்துள்ளார்.
"ஒருவர் கூச்சல்போட்டுக்கொண்டு எம்மிடம் வந்து மேiஜக்கு கீழ் ஒளிந்து கொள்ளுமாறு குறிப்பிட்டார்" என்று விபரிக்கும் அவர், "ஆயுததாரிகள் அல்லாஹ{ அக்பர் (இறைவன் மிகப்பெரியவன்) என்று கத்திக்கொண்டு சுட ஆரம்பித்தனர்" என்கிறார். "ஆயுததாரிகளில் ஒருவர்: ~அங்கு பல சிறுவர்களும் மேiஜகளுக்கு அடியில் ஒளிந்திருக்கிறார்கள், போய் அவர்களை பிடியுங்கள்' என்று கத்தினார் என கான் ஏ.எப்.பி. செய்திச் சேவைக்கு குறிப்பிட்டுள்ளார்.
"மிகப்பெரிய கறுப்பு பு+ட்ஸ்களை அணிந்த இருவர் என்னை நோக்கி வருவதை நான் பார்த்தேன். இந்த இருவரும் மேiஜகளுக்கடியில் ஒளிந்திருக்கும் மாணவர்களை பிடிக்க வந்தவர்களாக இருப்பார்கள்" என்றார். தனது முழங்கால்களுக்கு சற்று கீழால் இரு கால்களிலும் துப்பாக்கிக் காயம் பட்டதால் கடும் வலியை உணர்ந்ததாக கான் குறிப்பிடுகிறார். அந்த சூழலில் இறந்தவர் போல் நடிக்க அவர் தீர்மானிக்கிறார். "எனது கழுத்து டையை சுருட்டி வாய்க்குள் திணித்துக் கொண்டேன். சத்தம் போடாமல் இருக்கவே நான் அப்படிச் செய்தேன்
அந்த மிகப்பெரிய பூட்ஸ்களை அணிந்த நபர் மாணவர்களை தொடர்ந்து தேடிக்கொண்டிருந்தான். மாணவர்களின் உடல்களை சுட்டுக்கொண்டு வந்தான். மற்றுமொரு துப்பாக்கிச் சூட்டை எதிர்பார்த்து முடியுமானவரை படுத்து கண்களை மூடியவாறு இருந்தேன். மரணம் நெருங்குவதை உணர்ந்ததால் எனது உடல் நடுங்க ஆரம்பித்தது. எனக்கு அருகில் அந்த கறுப்பு பூட்ஸ் கால்கள் நெருங்கியதை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. அது நெருங்கும்போது நான் கொல்லப்படுவேன் என்று உணர்ந்தேன்" என்கிறார் 'hருக் கான்.
தாக்குதலுக்கு உள்ளான இராணுவ பொதுப் பாடசாலையில் இராணுவ மற்றும் சிவிலியன்களின் குழந்தைகள் கல்வி கற்று வந்துள்ளனர். இராணுவத்தால் நாடெங்கும் இவ்வாறான 150 க்கும் அதிகமான பாடசாலைகள் நடத்தப்படுகின்றன.
கானின் தந்தை கடையொன்றை நடத்தி வருபவர். அவர் தனது மகனுக்கு அருகில் இரத்தம் தோய்ந்த கட்டிலில் எந்த அசௌகரியமும் இன்றி அமர்ந்திருந்தார். இதன்போது கான் தனது அனுபவத்தை தொடர்ந்து விபரிக்க ஆரம்பித்தார். "அந்த நபர் வெளியேறிய பின்னரும் நான் ஒரு சில நிமிடங்கள் அங்கேயே இருந்தேன். பின்னர் அங்கிருந்து எழும்ப முயற்சித்தேன். எனது காயத்தால் அதிக வலியை உணர்ந்தேன்.
நான் அடுத்த அறை வரை தவழ்ந்து சென்றபோது பெரும் பயங்கரத்தை பார்த்தேன். எமது அலுவலக உதவியாளரின் உடல் தீப்பற்றி எரிவதை பார்த்தேன். கதிரையில் அமர்ந்தவாறு இருந்த அந்த பெண்ணின் உடலில் இருந்து இரத்தம் வடிந்துகொண்டிருந்தது. அந்த உடல் தீப்பற்றிக்கொண்டிருந்தது" என்றார்.பின்னர் உணர்விழந்திருக்கும் 'hருக் கான் மருத்துவமனை கட்டிலிலேயே வீழ்ந்துள்ளார்.



Post A Comment:
0 comments: