மக்கள் எதிர்நோக்கும் கஷ்டங்களை பார்க்க, சல்மான்கானை அழைத்துவந்து காட்டியிருக்கிறார்கள் - மைத்திரி

Share it:
ad
அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் உரிய ஆய்வுகளை மேற்கொள்ளவில்லை என பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன குற்றம் சுமத்தியுள்ளார்.

நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.

வடக்கு கிழக்கு மலையகம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு கஷ்டங்களை எதிர்நோக்கிக்; கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி, நடிகர் சல்மான் கானை அழைத்து வந்து கேளிக்கை நடத்துகிறார்.

சல்மான் கானை அழைத்து வருவதற்கு மாத்திரம் 700 மில்லியன் ரூபாவை இந்த அரசாங்கம் செலவிட்டுள்ளது.

இந்த மக்கள் எதிர்நோக்கும் கஷ்டங்களை பார்க்குமாறு சல்மான் கானை அழைத்து வந்து காட்டியிருக்கிறார்கள்.

எத்தனை பேர் உண்பதற்கு உணவி;ன்றியும், முறையான ஆடைகள் இன்றியும், அநாதரவாகவும், நோயுற்றும், வீடுகளை இழந்தும் இருக்கின்றார்கள் என்று அவர்கள் சென்று காண வேண்டும்.

இத்தனை அனர்த்தங்கள் நேர்ந்துள்ள தருணத்தில் அரசாங்கத் தரப்பினர் தமது அதிகாரங்கள் தொடர்பாக மாத்திரம் கவனம் செலுத்துகிறார்கள் என்று பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இத்தனை அனர்த்தங்கள் நேர்ந்துள்ள தருணத்தில் அரசாங்கத் தரப்பினர் தமது அதிகாரங்கள் தொடர்பாக மாத்திரம் கவனம் செலுத்துகிறார்கள் என்று பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

அரசாங்கம் நாட்டின் அனைத்து விடயங்களையும் தமது சொந்த உடமைகளாக்கிக் கொண்டு செயற்பட்டு வருவதாக ஐக்கிய தேசிய கட்சியின் தேசியத் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அதேவேளை, அரசாங்கம் கூறும் அபிவிருத்தி தொடர்பாக அவர் பெந்தொட்டையில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது கருத்து வெளியிட்டார்.

அனைத்து விடயங்களையும் தமது உடமைகளாக்கிக் கொண்டு எவ்வாறு அரச நிர்வாகத்தை நடத்துவது.

நாட்டின் திறைசேறியும், விளையாட்டுத்துறையும் அவர்களின் தனிப்பட்ட உடமைகள்தான்.

ராஜபக்ஷ படையணிக்கு உரிமையில்லாத எந்த விடயங்கள்தான் இருக்கின்றன.

இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலம் இல்லாத ஒரு ஊழல் நிறைந்த நிர்வாகமே இருக்கின்றது.

பாதை அமைப்பதிலிருந்து வானூர்தி நிலையம் அமைப்பது வரை லஞ்சம் பெறப்படுவதாக எதிர்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்ஹ தெரிவித்துள்ளார்.
Share it:

Post A Comment:

0 comments: