ரவூப் ஹக்கீமுக்காக, நாட்டை பிளவுபடுத்த முடியாது - ஜனாதிபதி மஹிந்த

Share it:
ad
தேர்தலுக்காக நாட்டை பிளவுபடுத்துவதற்கு தாம் தயாராக இல்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கிழக்கில் தனியான முஸ்லிம் அலகு ஒன்றை உருவாக்குவதற்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவுப் ஹக்கீம் யோசனை தெரிவித்தாலும் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இதன்காரணமாகவே, அந்த கட்சியினர் அரசாங்கத்திலிருந்து விலகியதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் வாக்குகளுக்காக தமக்கு நாட்டை பிளவுபடுத்த முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

களனி, கிரிபத்கொடை, மாகொல, கிரிந்திவல மற்றும் மஹர பிரதேசங்களில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்புகளின் போதே ஜனாதிபதி இந்த கருத்தை வலியுறுத்தியிருந்தார்.

இந்தநிலையில், கிரிபத்கொடை மக்கள் சந்திப்பில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தமது கட்சியின் ஆதரவு சிறிசேனவுக்கு என இன்று அறிவித்துள்ளார்.

தாமும் ஹக்கீமும் இணைந்து ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

தம்மிடம் அமைச்சராக இருந்த அவர், இறுதி; சந்தர்ப்பத்தில் கிழக்கை தனியான நிர்வாக அலகாக மாற்றுமாறு யோசனை முன்வைத்திருந்தார்;. அந்த சந்தர்பத்தில்  நாடு தொடர்பிலே தாம் தீர்மானம் மேற்கொண்டதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


Share it:

Post A Comment:

0 comments: