புலிகளின் வன்முறைகளினால் இந்நாட்டு முஸ்லிம்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகினர் - சந்திரிக்கா

Share it:
ad
இந்த நாட்டில் உள்ள எந்த மக்களாக இருந்தாலும் சமாதானமாகவும் நிம்மதியாகவும் வவாழ வேண்டும் என்பதற்கான நான் பாடுபடுவேன் என பொதுவேட்பாளர் எப்போதும் கூறுவார்.

எனவே புதிய ஜனாதிபதி மைத்திரிபால உங்கள் மீள்குடியேற்றம் தொடர்பான பிரச்சினைக்கு சரியாக முறையில் தீர்வு காண்பார். அதற்கு நாமும் ஒத்துழைப்பு வழங்குவோம். ஒரு நாட்டில் அதன் எல்லைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தன. அதேபோல பாதுகாப்பும் முக்கியமானது. ஆகவே பாதுகாப்பிற்கு எதுவிதமான பங்கம் ஏற்படாத வகையில் தான் நாம் மீள்குடியேற்றத்தை மேற்கொள்ள உள்ளோம். இவ்வாறு தெரிவித்தார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க.

எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபாலசை ஆதரித்து நல்லூர் சங்கிலியன் தோப்பில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்தகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:-

எனது அரசு 11 ஆண்டுகள் பதவி வகித்தது. எனது காலத்தில் வடக்கிலும் கிழக்கிலும் ஏனைய மாகாணங்களிலும் வாழக்கூடிய பெரும்பான்மை மக்கள், தமிழ், முஸ்லிம் மக்கள் மக்கள் மத்தியிலும் அதிகாரம் தொடர்பான அதிகாரப்பகிர்வு அமுல்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த அரசியல் அமைப்பினை முன்னெடுத்துச் செல்வதற்கு நான் என்னாலான சகல முயற்சிகளையும் மேற்கொண்டேன்.

அந்த நேரம் அரசியல் அமைப்பினை மாற்றுகின்ற கனவை நான் நனவாக்க வேண்டும் என்றால் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளாலேயே முடியும். ஆனால் அன்றைய கால கட்டத்தில் என்னுடைய இந்த அரசியல் அமைப்பு யோசனைக்கு சார்பாக பெரும்பாலான அரசியல் கட்சிகள் ஒத்துழைப்பு வழங்காமையினால் அந்த முயற்சியைக் கைவிட வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

ஆகவே இந்த அரசியல் அமைப்பை யதார்த்தமாக்க எமக்கு பல்வேறு தடைகள் ஏற்பட்டன. விடுதலைப் புலிகள் மிகவும் வன்முறை சார்ந்த சில நடவடிக்கைகளை மேற்கொண்ட காரணத்தினால் இந்த நாட்டு மக்களை , முஸ்லிம் மக்களை பெரும்பாதிப்புக்கு ஏற்படுத்திய காரணத்தினால் பெரும்பான்மை மக்கள் சிறுபான்மை மக்கள் அனைவரையும் பாதிப்புக்கு உள்ளாக்கியது.

இன்று போர் ஓய்ந்து விட்டது. ஆகவே நீங்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கின்றீர்கள். இந்த நாட்டிலே அமைதியாகவும் சமாதானமாகவும் வாழ முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு.

Share it:

Post A Comment:

0 comments: