(அஷ்ரப் ஏ, சமத்)
ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் இருவாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மஹிந்த அரசை விட்டு வெளியேற ஆயிரம் காரணங்கள் இருந்தும் மஹிந்த அரசுக்கு ஆதரவளிக்கு ஒரு காரணத்தை தேடிவருவதாக மேல் மாகாண சபை உறுப்பினர் பைரூஸ் ஹாஜியார் கொலன்னாவை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் குறிப்பிட்டார்..
அமைச்சர் ஹக்கீம் தேர்தல் முடியும் வரை மட்டுமல்ல இந்த உலகம் அழியும் வரை மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துடன் தங்கியிருக்க ஒரு நல்ல காரணத்தையும் தேடி கண்டுபிடித்து கொள்ளமாட்டார் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதன்போது மேலும் கருத்துவெளியிட்ட அவர்,
இன்று முஸ்லிம் மக்களிடத்தில் நாம் மைத்ரிபால சிறிசேன அவர்களின் சின்னம் தொடர்பாக வாக்களிக்கும் முறை தொடர்பாக மட்டுமே தெளிவூட்டுகிறோம் மைத்ரிக்கு வாக்களிக்ககூறி நாம் பெரிதாக அலட்டிக்கொண்டு பிரசாரம் செய்ய வேண்டியதில்லை என்பதை நாம் தினம் சந்திக்கும் மக்கள் ஊடாக தெரிந்துகொள்கிறோம் மக்கள் தெளிவாக உள்ளனர் அதிலும் குறிப்பாக முஸ்லிம் மக்கள் மிகமிக தெளிவாக உள்ளனர் என குறிப்பிட்ட அவர்.
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் பல தடவைகள கட்சி உயர் பீடத்தை கூட்டி கருத்து கேட்கு வந்த அமைச்சர் கடந்த சில தினங்களாக அலரிமாளிகைக்கு சென்று மஹிந்த ராஜபக்ஷவுடன் கலந்துரையாடி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சமூகத்தின் பெயரால் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக முடிவெடுக்க கட்சி கலந்துரையாடல்கள் வைத்த நேரங்களில் அமைச்சர் ஹக்கீம் ஆக்கபூர்வமான சமூக சேவைகளை செய்திருந்தால் கூட முஸ்லிம்கள் நன்றி கூறியிருப்பார்கள் என அவர் குறிப்பிட்டார்.
Post A Comment:
0 comments: