மஹிந்த ராஜபக்ஸ பல தடவைகள் எங்களை ஏமாற்றியுள்ளார் - அமீர் அலி

Share it:
ad
கடந்த ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்ற தேர்தல், மாகாண சபை தேதல்கள் மற்றும் உள்ளுராட்சி தேர்தல்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும், அவர் தலைமையிலான அரசாங்கத்திற்கு தமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அதிகளவு வாக்குகளை பெற்றுக்கொடுத்துள்ளது.

இவ்வாறு தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான அமீர் அலி, கூறினார். இதுதொடர்பில் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு அவர் வழங்கிய விபரம் வருமாறு,

அமீர் அலி என்ற தனி மனிதன் பல்லாயிரம் வாக்குகளை மஹிந்த ராஜபக்ஸவுக்கும், அவர் தலைமையிலான அரசாங்கத்திற்கும் பெற்றுக்கொடுத்துள்ளான். இதற்கு பிரதியுபகரமாக 4 வருடங்களுக்கு முன்னரே இந்த அரசாங்கம் எமது கட்சிக்கு ஒரு தேசியப் பட்டியல் எம்.பி. வழங்குவதாக உறுதி வழங்கியிருந்தது.

எனினும் அதனை வழங்காமல் இழுத்தடித்து வந்தது. 

இந்நிலையில் திடீரென எமது கட்சிக்கு ஒரு தேசியப் பட்டியல் வழங்குவதாக, அரசாங்கம்  அறிவிக்கவே, கட்சியின் தீர்மானத்திற்கு இணங்க, தேசியப்பட்டியல் எம்.பி. பதவி எனக்கு கிடைத்தது. எனது கட்சியின் தீர்மானத்திற்கு அமையவே நான் செயற்படுகிறேன். நான் இந்த எம்.பி. பதிவியில் தொடர்ந்து இருப்பதா அல்லது இல்லையா என்பதைகூட எமது கட்சிதான தீர்மானிக்கும்.

எமது கட்சியை நோக்கியும், என்னை நோக்கியும், மஹிந்த ராஜபக்ஸ முன்வைத்துள்ள குற்றச்சாட்டை நிராகரிக்கிறேன். தேசியப் பட்டியல் எம்.பி. பதவியை காப்பாற்றிக்கொள்வதற்காக ஆளும்தரப்புக்கு கட்சி மாறும் பழக்கத்தை ஏற்படுத்தியவரே முஸ்லிம் காங்கிஸினால் நியமிக்கப்பட்ட ஹுஸைன் பைலதான். அவர் பல்டியடித்தவுடன் அவரை மஹிந்த ராஜபக்ஸ அரவணைத்துக்கொண்டார்.

பின்னர் திஸ்ஸ அத்தநாயக்கா ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பல்டியடித்தார். இதன்போதும் மஹிந்த அவரை அரவணைத்து, அமைச்சுப் பதவியும் வழங்கியுள்ளார். ஆனால் நான் அப்படியல்ல. சலுகைகளை நிராகித்துவிட்டுத்தான் எதிரணியில் இணைந்துள்ளேன். மேலும் எனது தொகுதி மக்களும், மாவட்ட மக்களும் இந்த அரசாங்கத்திற்கு வாக்களித்துள்ளனர். மஹிந்த ராஜபக்ஸவும், அவர் தம்பியும் எப்போதோ இந்த தேசியப் பட்டியல் எம்.பி. பதவியை எனக்கு வழங்கியிருக்க வேண்டும். 

இப்போது நாங்கள் பொது எதிரணிக்கு ஆதரவாக திருமபியவுடன் எனக்கு எதிராக குற்றம் சுமத்துகின்றனர் எனவும், இதனை தாம் நிராகரிப்பதாகவும் அமீர் அலி மேலும் கூறினார்.

Share it:

Post A Comment:

0 comments: