
ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு எதிராக நடைபெறும் போரில், ஈராக் ராணுவ வீரர்களுக்கு ஈரானின் ராணுவ ஆலோசகர் ஹமீது தாக்ஹாவி பயிற்சி அளித்து வந்தார். அவரை ஐஎஸ்ஐஎஸ்.கள் நேற்று துப்பாக்கியால் சுட்டு கொன்றனர்.ஈராக்கில் ஷியா பிரிவு முஸ்லிம்களுக்கு எதிரான ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் செயல்பாடுகளை முறியடிக்க ரராணுவம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. ஈராக் ராணுவத்துக்கு துணையாக அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படை தீவிரவாத முகாம்கள் மீது வான்வழி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.
ஈராக் ராணுவ வீரர்கள் மற்றும் குர்தீஷ் படையினருக்கு போர் பயிற்சி மற்றும் தொழில்நுட்பங்களை ஈரான் ராணுவம் மேற்கொண்டு வருகிறது. ஈரானின் ராணுவ பிரிகேடியர் ஹமீது தாக்ஹாவி தலைமையில் ஈரானிய ராணுவம் பயிற்சி அளித்து வந்தது.
இந்நிலையில், பாக்தாத்துக்கு அருகே ஈராக் ராணுவ தளத்தில் வீரர்களுக்கு நேற்று காலை ஈரானிய ராணுவ பிரிகேடியர் ஹமீது பயிற்சி அளித்து கொண்டிருந்தார். அப்போது ராணுவ தளத்துக்குள் அத்துமீறி நுழைந்த ஐஎஸ்ஐஎஸ் வாதிகள் ஹமீதை துப்பாக்கியால் சுட்டு கொன்றனர், இதைத் தொடர்ந்து அவரது உடல் டெஹ்ரானுக்கு கொண்டு வரப்பட்டது. இன்று காலை அவரது உடலுக்கு ராணுவ மரியாதையுடன் இறுதி சடங்குகள் நடைபெறும் என்று ஈரானிய ராணுவம் அறிவித்துள்ளது.


Post A Comment:
0 comments: