(V Ema..)
உலகையே பதறச் செய்திருக்கிறது தலிபான்களின் பெஷாவர் பள்ளித் தாக்குதல். தெய்வத்திற்குச் சமமான குழந்தைகள் ரத்தச் சகதியில் மிதந்தது, கல் நெஞ்சையும் கரைய வைத்த சம்பவம்.
உலகையே பதறச் செய்திருக்கிறது தலிபான்களின் பெஷாவர் பள்ளித் தாக்குதல். தெய்வத்திற்குச் சமமான குழந்தைகள் ரத்தச் சகதியில் மிதந்தது, கல் நெஞ்சையும் கரைய வைத்த சம்பவம்.
‘‘உலகில் நடந்த தாக்குதல்களிலேயே மிகவும் மோசமான தாக்குதல் இதுதான். இதற்காக பாகிஸ்தான் தலை குனிகிறது!’’ என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் தனது பேட்டியில் வருத்தப்பட்டார்.
எப்போதும் கலகலத்துக் காணப்படும் ட்விட்டர் சமூக இணையதளமும் சோகத்துடனே ட்வீட்டுகளை உள்வாங்கிக் கொண்டிருக்கிறது. பெஷாவர் சம்பவத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமுள்ள வி.ஐ.பி.க்கள் ட்வீட்டியுள்ள ட்வீட்டுகள் இவை:
பான் கீ மூன் (ஐ.நா. பொதுச் செயலாளர்):
‘‘குழந்தைகள் மீதான இந்தக் கொடூரச் செயல் கடும் கண்டனத்துக்குரியது. இது மிகவும் கோழைத்தனமான செயல் மட்டுமல்ல; இதுபோன்ற கொடிய செயலுக்கு எந்தவித நியாயத்தையும் கற்பிக்க முடியாது!’’
ஒபாமா (அமெரிக்க அதிபர்):
‘‘குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் மீதான இந்தக் கோழைத்தனமான தாக்குதலின் மூலம், தீவிரவாதிகள் தாங்கள் ஒழுக்கமற்ற, கொள்கைப் பிடிப்பற்றவர்கள்தான் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளனர்.
தீவிரவாதத்தை ஒழிக்க எங்கள் அமெரிக்க அரசு பாகிஸ்தான் மக்களுடன் இணைந்து அமைதியை நிலைநாட்டும் வகையில் செயல்படும்!’’
அமீர்கான் (நடிகர்):
‘‘எந்தப் பாவமும் அறியாத குழந்தைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கேள்விப்பட்டபோது, இடிந்து போய்விட்டேன். இன்னும் என்னால் அதிலிருந்து மீள முடியவில்லை!’’
மோடி (இந்தியப் பிரதமர்):
‘‘அறிவீனமான இந்தச் செயல் மூலம் தீவிரவாதிகள் என்ன சாதிக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. குழந்தைகள் தாக்கப்பட்ட இந்தச் சம்பவத்துக்கு என் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்!’
சானியா மிர்சா (டென்னிஸ் வீராங்கனை)
‘‘செய்தியைக் கேள்விப்பட்டதும் என் இதயமே நொறுங்கிவிட்டது. நாட்டில் மனிதம் எங்கே போகிறது?
கடவுளே... அந்தப் பிஞ்சுக் குழந்தைகளையும், பிரிவினால் வாடும் பெற்றோரையும் தயவுசெய்து காப்பாற்றுங்கள். என் மனம் வலிக்கிறது!’’
டாப்ஸி (நடிகை):
முதலில் ஆஸ்திரேலியா; இப்போது பாகிஸ்தான்; அடுத்து எந்த நாடு? இப்படியே தினமும் பயந்து பயந்தே வாழ வேண்டியிருப்பது துரதிர்ஷ்டமான விஷயம். நினைக்கவே பயமாக இருக்கிறது!’’
சோனாக்ஷி சின்ஹா (நடிகை):
‘‘கடவுளே... இந்த உலகில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? இம்மாதிரி நேரங்களில்தான் மனிதம் பற்றிய கேள்வி எழுகிறது. எல்லோரும் அந்தக் குழந்தைகளுக்காகப் பிரார்த்தியுங்கள்!’’
கிரண்பேடி (முன்னாள் ஐபிஎஸ்):
‘‘உலகின் மிகப் பெரிய துயரம் - பெற்றெடுத்த குழந்தைகளை இழந்து தவிக்கும் தனிமைதான்! உலகின் மிகப் பெரிய குற்றம் - பெற்றோர்களிடமிருந்து குழந்தைகளை இழக்க வைப்பது.
அப்படிப்பட்ட மிகப் பெரிய துயரமும் குற்றமும் பெஷாவரில் நடந்திருக்கிறது! இது மிகவும் கண்டிக்கத்தக்க செயல்!’’
விஷால் தத்லானி (பாலிவுட் பின்னணிப் பாடகர்):
‘‘கடவுள் என்றைக்குமே இந்தச் செயலை மன்னிக்க மாட்டார். வாழ்நாள் முழுவதும் இது மிகவும் கண்டனத்துக்குரிய செயல். இத்தகைய கொடூர செயலைச் செய்தவர்கள் இறக்கும்போது, புதைப்பதற்கு இடம்கூட இருக்காது!’’
கைலாஷ் சத்யார்த்தி (நோபல் பரிசாளர்):
"தலிபான்களே... உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன். என்னைப் பிணைக் கைதியாக்கிக் கொள்ளுங்கள். என் உயிரைக்கூட எடுத்துக் கொள்ளுங்கள்! ஒன்றுமறியா பச்சிளங்குழந்தைகளை விட்டு விடுங்கள்!’’



Post A Comment:
0 comments: