துனீசிய ஜனாதிபதி தேர்தலில் இஸ்லாமியவாத எதிர்ப்பாளர் வெற்றி

Share it:
ad
துனீசிய ஜனாதிபதி தேர்தலில் இஸ்லா மியவாத எதிர்ப்பாளரான பெஜp கைத் எசப்சி வெற்றியை அறிவித்துள்ளார். எனினும் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இரண்டாம் சுற்று தேர்தலில் எதிர்த்துப் போட்டியிட்ட மொன்கப் மர்சூக்கி தோல்வியை ஏற்க மறுத்திருந்தார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் நீண்டகால தலைவராக இருந்த சைன் அல் அப்தீன் பென் அலியை பதவி கவிழ்த்த அரபு வசந்தத்தின் பின்னர் துனீசியவில் ஜனநாயக ஆட்சி மாற்றத்தின் முக்கிய அங்கமாக இந்த ஜனா திபதி தேர்தல் கருதப்படுகிறது.

வாக்கு பதிவுகள் முடிந்து சில மணி நேரங்களிலேயே பென் அலியின் ஆட்சியில் சபாநாயகராக இருந்த 88 வயது எசப்சி அதிக இடைவெளி வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது உறுதியானது. உத்தியோகமற்ற முடிவுகள் வெளியானதை அடுத்து தலைநகரில் கூடிய அவரது ஆதரவாளர்கள் "பெஜp ஜனாதிபதி" என்று கோ'மிட்டு வெற் றியை கொண்டாடினர்.

எசப்சியின் வெற்றியுடன் அவருக்கு உறுதியான அதிகாரம் கிடைத்துள்ளது. எசப்சியின் மதச்சார்பற்ற நிதா துனீஷ் கட்சி கடந்த ஒக் டோபரில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் பிர தான இஸ்லாமியவாத கட்சியான அன்னஹ் தாவை வீழ்த்தி வெற்றியீட்டியிருந்தது.

"துனீ'pயாவுக்காக உயிர்த்தியாகம் செய்தவர்களுக்கு எனது வெற்றியை அர்ப் பணிக்கிறேன். மர்சூக்கியிற்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எவரையும் வெளியேற்றாமல் அனைவரையும் ஒன்றி ணைத்து செயற்படுவோம்" என்று உள்@ர் தொலைக்காட்சி ஒன்றுக்கு எசப்சி குறிப்பிட் டுள்ளார். எனினும் தேர்தலின் உத்தியோக பு+ர்வ முடியுவுகள் நேற்று பின்னேரம்வரை வெளியாகாத நிலையில் முடிவுகள் இன்னும் தீர்க்கமானதாகவே இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் குறிப்பிடுகின்றன.

"இதுவரை எதுவும் உறுதியாகவில்லை" என்று மர்சூக்கி செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார். 67 வயதான மனித உரிமை செயற் பாட்டாளரான மர்சூக்கி முன்னாள் சர்வாதிகாரி பென் அலியின் ஆட்சியில் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தவராவார்.

"வெற்றி அறிவிப்பு ஜனநாயகத்திற்கு எதிரானதாகும். சட்ட ஒழுங்கிற்கு மதிப்பளிப்பதாக இருந்தால் நாம் காத்திருக்க வேண்டும்" என்று தனது ஆதரவாளர்கள் முன் மர் சூக்கி குறிப்பிட்;டுள்ளார்.

"நாம் தான் வெற்றியாளர்கள், நாம் தான் வெற்றியாளர்கள். நீங்கள் வென்றால் துனீ'p யாவின் வெற்றியாகும். துனீ'pயாவின் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்காக நீங்கள் வெற்றி பெற வேண்டும்" என்றும் மர்சூக்கி தனது ஆதரவாளர்களிடம் குறிப்பிட்டார். கடந்த 2011 ஆம் ஆண்டு தொடக்கம் துனீ'pய இடைக்கால ஜனாதிபதியாக இருக்கும் மர்சூக்கிக்கு நாட்டின் மிதவாதிகள், வறிய தெற்கு பகுதியில் ஆதரவு அதிகமாக உள்ளது.

தவிர, அரபு வசந்தத்திற்கு பின்னரான துனீ'pய அரசியலில் பிரதான பங்கு வகித்த இஸ்லாமியவாத அன்னஹ்தா கட்சி ஆதரவாளர்களும் மர்சூக்கிக்கே அதிக ஆதரவுடையவர்களாக உள்ளனர்.

1956 ஆம் ஆண்டு பிரான்ஸிடம் இருந்து சுதந்திரம் பெற்றதன் பின்னர் துனீ'pய மக் கள் சுயாதீனமான தேர்தல் மூலம் தனது ஜனாதிபதியை தேர்வு செய்யும் முதல் சந்தர்ப்பமாக இது இருந்தது. எனினும் ஞாயிற் றுக்கிழமை தேர்தலில் பதிவுசெய்யப்பட்ட சுமார் 5.3 மில்லியன் வாக்காளர்களில் 48 வீதமானோரே தமது வாக்குகளை பதிவு செய்துள்ளனர். இது இரண்டு மாதங்களுக் குள் துனீ'pயாவில் இடம்பெறும் மூன்றாவது தேர்தலாக இருந்தது. முந்தைய இரு சந்தர்ப் பங்களிலும் 70 வீதமானோர் வாக்களித்தி ருந்தனர்.

உத்தியோகபூர்வமற்ற தேர்தல் முடிவுக ளின்படி எசப்சி 55.5 வீத வாக்குகளை வென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. துனீ'pயா வின் சுதந்திரத்திற்கு பின்னரான முதலாவது தலைவரான ஹபிப் பர்குபா மற்றும் ஜனாதி பதி பென் அலி ஆகிய இருவரது ஆட்சியி லும் எசப்சி அரசில் பதவி வகித்துள்ளார்.

கடந்த மாதம் இடம்பெற்ற முதல் சுற்று ஜனாதிபதி தேர்தலில் எசப்சி 39 வீத வாக் குகளை பெற்று முன்னிலை வகித்ததோடு மர்சூக்கி 33 வீத வாக்குகளை வென்று இரண் டாவது இடத்தை பிடித்திருந்தார். நாட்டின் கடலோர பிராந்தியங்கள் மற்றும் செல்வந் தர்களிடம் எசப்சிக்கு ஆதரவு இருந்தது. நாட்டின் ஸ்திரத்தன்மை மற்றும் அனுபவத்தை முன்வைத்தே எசப்சி தனது பிர சாரத்தை மேற்கொண்டார்.
Share it:

Post A Comment:

0 comments: