பிரான்ஸில் 'அல்லாஹு அக்பர்'' எனக்கூறி 11 பேருக்கு காயம் ஏற்படுத்தியவர் கைது

Share it:
ad
பிரான்ஸில் பாதசாரிகள் மீது வாகனத்தை மோதவிட்டு தாக்குதல்
பிரான்ஸில் 'அல்லாஹு  அக்பர்'' என கூச்சலிட்டுக் கொண்டு பாதசாரிகள் மீது வாகனத்தை மோதவிட்டு 11 பேருக்கு காயம் ஏற்படுத்திய ஒட்டுநர் கைதுசெய்யப் பட்டுள்ளார்.

இந்த ஓட்டுநர் கடந்த ஞாயிறன்று அரைமணி நேரத் திற்குள் டிஜோன் நகரின் ஐந்து இடங்களில் பாதசாரிகளை இலக்குவைத்து வாகனத்தை மோதவிட்டுள்ளார். இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளான இருவரது நிலை கவ லைக்கிடமாக உள்ளது.

கடந்த சனிக்கிழமை அல்லாஹு  அக்பர் அல்லது இறைவன் மிகப்பெரியவன் என்று கூச்சலிட்டுக்கொண்டு கத்தியால் பொலிஸாரை தாக்கிய ஒருவரும் பிரான்ஸில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

தாக்குதல் நடத்திய 40 வயதுடைய நபர் வாகனத்தை மோதவிடும் முன் பலஸ்தீன குழந்தைகள் என்று கூச்சலிடுவதும் கேட்டதாக சம்பவத்தை பார்த்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர். எனினும் தாக்குதல்தாரி தனிப்பட்டு இயங்கி இருப்பார் என நம்புவதாக உள்துறை அமைச்சின் பேச் சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

மேற்கு ஐரோப்பாவில் அதிக முஸ்லிம் சனத்தொகை கொண்ட நாடாக பிரான்ஸ் உள்ளது. இங்கும் சுமார் ஐந்து முதல் ஆறு மில்லியன் முஸ்லிம்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. 
Share it:

Post A Comment:

0 comments: