அரசாங்கத்தில் ஏதேனும் தவறுகள் காணப்படுமாயின் அரசாங்கத்தில் இருந்து விலகி சென்றவர்களும் அதற்கு பொறுப்புக் கூற வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
பொல்காவெல பகுதியில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
அலவ்வ, பொல்காவெல மற்றும் மாவத்தகம பிரதேசங்களுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி பொல்காவெல – வீரபுகெதர பிரதேசத்தில் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டார்.
2005ஆம் ஆண்டில் நாட்டில் காணப்பட்ட நிலைமையை புதிதாக கூற வேண்டியதில்லை. இது குறித்து இன்று சிலர் அரசாங்கத்தில் இருக்காதது போன்று பேசுகின்றனர். விலகி செல்லும் வரை அரசாங்கம் முன்னெடுத்த அனைத்து விடயங்களும் சிறந்தது என கூறினார்கள். ஒரு நாளும் விமர்சிக்க வில்லை. தற்போது அவசரமாக குறைகளை கண்டு பிடித்து கூறுகின்றனர். நாங்கள் ஏதேனும் தவறு செய்திருந்தால் அது தெரியாது, இருந்தும் அவ்வாறு இடம்பெற்றிருந்தால் அனைத்து தவறுகளிலும் இவர்களுக்கு தொடர்பு உள்ளது. பொறுப்புள்ளது. அமைச்சரவை, பாராளுமன்ற உறுப்பினர்கள் நாம் அனைவரும் செய்த தவறுகளுக்கு என்னை மற்றும் ஏன் சாடுகின்றார்கள்...?



Post A Comment:
0 comments: