சீனாவில் உள்ள ஒரு மருத்துவமனையில், நோயாளிகளுடன் புகைப்படம் எடுத்ததால் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு 3 மாதம் சம்பளம் ரத்து செய்யப்பட்டுள்ளது. நோயாளி மயக்க நிலையில் இருந்த போது, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கை கோர்த்து நிற்கும் படியும், மற்ற மருத்துவர் சிகிச்சை அளித்து கொண்டிருக்கும் படி ஒரு புகைப்படம் எடுத்துள்ளனர். மேலும் மற்றொரு சிக்கிச்சையில் மருத்துவர்கள் அனைவரும் கை சைகையில் வெற்றி என காட்டும் வகையில் புகைப்படம் எடுத்துள்ளனர். இது போன்ற சம்பவத்தினால் மக்கள் கோபத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதனையடுத்து சீன சுகாதார அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு மருத்துவமனை மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை தண்டிக்கும் வகையில் 3 மாத சம்பளத்தை ரத்து செய்துள்ளனர். இதனையடுத்து மருத்துவமனை பொதுமக்கள் இடையே மன்னிப்பு கேட்டுள்ளது.



Post A Comment:
0 comments: