ஆளும் கட்சி அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க நானும் ரணில் விக்கிரமசிங்கவும் செய்துகொண்ட ஒப்பந்தம் தொடர்பில் நேற்றைய தினம் உரை ஒன்றை ஆற்றியுள்ளார்.
இது உண்மைக்கு புறம்பானது எனவே இதற்கு எதிராக வழக்குத் தொடரப்படும். திஸ்ஸ அரசின் தாளத்துக்கு ஆடுவதாகவும், நானும் ரணிலும் எப்போதும் திஸ்ஸ குறிப்பிட்டது போன்று நாட்டையும் இராணுவத்தையும் காட்டிக் கொடுக்கும் ஒப்பந்தமொன்றைச் செய்யவில்லை.
அத்துடன் திஸ்ஸ சமர்ப்பித்த ஆவணங்கள் போலியானவை, அதில் போடப்பட்டிருக்கும் எனதும், ரணில் விக்கிரமசிங்கவினதும் கையெழுத்துக்கள் போலியானவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.



Post A Comment:
0 comments: