மைத்திரிபால சிறிசேன, மீளவும் சுதந்திரக் கட்சியில் இணைந்து கொள்வார்

Share it:
ad
கட்சியோ அல்லது அரசியல் சாசனமோ இன்றி எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பெர்துச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

எனவே ஏதேனும் ஓர் சட்டத் தேவையின் போது மைத்திரிபாலவினால் நீதிமன்றிற்கு கூட செல்ல முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தரப்பினர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை வெளியிட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகிய போதிலும், கட்சியின் வாக்கு பலம் வீழ்ச்சியடையவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரச்சாரம் ஆரம்பிப்பதற்கு முன்னதாக மைத்திரிபால சிறிசேன புறாக்களை கூண்டிலிருந்து விடுவித்ததாகவும், அந்த புறாக்கள் மீளவும் கூட்டுக்குள் சென்றதாகவும் இதே போன்று பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன மீளவும் கட்சியில் இணைந்து கொள்வார் என அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னரும் சுதந்திரக் கட்சியின் செயலாளர்கள் கட்சியை விட்டு விலகி மீண்டும் இணைந்து கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

Share it:

Post A Comment:

0 comments: