மைத்திரி வெற்றியீட்டினால் சந்திரிக்கா, ரணிலின் நிலை என்ன..?

Share it:
ad
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தேர்தலில் வெற்றியீட்டினால் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவினதும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினதும் ஆட்சியே நீடிக்கும் என தேசப்பற்றுடைய தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பு விஜயராம சவ்சிறிபாயவில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தவறுதலாக மைத்திரபால ஆட்சிக்கு வந்தால், ரணிலினதும் சந்திரிக்காவினதும் ஆட்சியையே காண முடியம். மைத்திரிபால ரணிலை சேர் என்றும் சந்திரிக்காவை மேடம் என்றும் அழைத்து ஆட்சி நடத்துவார்.

மருந்து சட்டத்தை அதிகாரிகள் திருடுவதனை மைத்திரிபால வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றார். நாட்டை ஆட்சி செய்ய போட்டி போடும் இந்த சட்ட வரைவினை சிங்கள மொழியில் மொழி பெயர்ப்புச் செய்யக்கூட முடியவில்லை.

அரச சார்பற்ற நிறுவனங்களின் நிபந்தனைகளுக்கு அடிப்படையில் சந்திரிக்காவும், ரணிலுமே இந்த நாட்டை ஆட்சி செய்வார்கள். ஜாதிக ஹெல உறுமய கட்சியின் சம்பிக்க ரணவக்க ஆடை அணிந்து கொண்டா பேசுகின்றார்.

ஹெல உறுமயவின் கொள்கைகள் முற்றிலும் மாற்றமடைந்துள்ளன என குணதாச அமரசேகர குற்றம் சுமத்தியுள்ளார்.

Share it:

Post A Comment:

0 comments: