முஸ்லிம்களின் பொறிக்குள் சிக்கியுள்ள, பொது பலசேனாவும், ஞானசாரரும்

Share it:
ad
-அஷ்ரப் ஏ சமத்-

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் முஸ்லிம்களின் பொறிக்குள் சிக்கியுள்ள போதுபலசேனா அமைப்பும் ஞானசார தேரரும் ஜனவரி எட்டாம் திகதி முஸ்லிம்கள் மகிந்தருக்கு எதிராக வழங்கப்போகும் வாக்குகளால் கூண்டோடு ஒழிக்கப்படுவார்கள் என ஐக்கிய தேசிய கட்சிமேல் மாகாண சபை உறுப்பினர் எம் எஸ் எம் பைருஸ் ஹாஜியார் குறிப்பிட்டார்.

நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது கருத்துவெளியிட்ட அவர் பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேன என அறிவிப்பு வெளியானது முதல் வாயடைத்து  போயுள்ள பொதுபல சேனா செய்வதறியாது தடுமாறி வருகிறது. அழுத்கம கலவரங்களுக்கு மூலகாரணமாகா இருந்த  ஞான சார தேரர் குரானை ஹதீஸை விமர்சித்த அதே ஞானசார தேரர் அல்லாஹ்வை பன்றிக்கு ஒப்பிட்ட அவ்வமைப்பின் காடையர்கள் இன்று முஸ்லிம்கள் எமக்கு எதிரிகள் அல்ல என குறிப்பிடும் அளவுக்கு மைத்ரியின் வருகை அவர்களை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது .

தேர்தல் களத்தில் பொதுபல ஆட்டம் போட்டால் பச்சோந்தி முஸ்லிம் தலைமைகளையும் புறம்தள்ளிவிட்டு முஸ்லிம்கள் மகிந்தருக்கு எதிராக தமது வாக்குகளை நூறு சதவிகிதம் அள்ளிவழங்குவார்கள் என்பதை புரிந்துகொண்ட பொதுபல சேனாவை  பின்புலத்தில் இருந்து இயக்கும் சின்ன தம்பி  ஞானசாரரை அடங்கிப்போகும்படி பணித்துள்ளமை இன்று நாடறிந்த இரகசியம்.

இவர்களின் நாடகங்களை மக்கள் நன்றாக புரிந்துகொள்ளவேண்டும் மகிந்தருக்கு  xxxxx செல்லும் சில சொரணை கொட்ட பெயர்தாங்கிகளை  தவிர ஒட்டுமொத்த முஸ்லிம்களும் பொதுபல சேனாவும் ஞானசார தேரரும் மவுனமாக இருப்பதின் பின்புலத்தை நன்றாக விளங்கிக்கொண்டுள்ளனர்.

இதனை விளங்கிக்கொண்ட நாம் வரும் வரும் எட்டாம் திகதி எமது தலையெழுத்தை அமது சமூகத்தின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வாக்குகள் எனும் ஆயுதத்தை மகிந்தருக்கு எதிராக அளித்து பொதுபல சேனாவை விரட்டியடிக்கும் முதல் அடியை எடுத்து வைக்கவேண்டும் .

மக்கள் ஆணை எமக்கு கிடைத்த மாத்திரத்தில் ஞான சாராரையும் அவரது கூட்டத்தையும் நாம் விரட்டியடிப்போம் இது நாம் எமது ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களுக்கும் வழங்கும் வாக்குறுதியாகும் . ஏற்கனவே மைத்ரியின் வருகையால் ஆட்டம் கண்டுள்ள பொதுபல சேனா அல்லாஹ்வின் உதவியால் வரும் எட்டாம் திகதி பொது வேட்பாளருக்கு வழங்கப்போகும்  மக்கள் ஆணையால் விரட்டியடிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை.

Share it:

Post A Comment:

0 comments: