இந்த சமுதாயம் மூச்சு திணறவேண்டிய, கட்டாயம் விதிகப்படலாம்..!!

Share it:
ad
Abu Uraif ( al azhari )  

எதிர் வரும் ஜனாதிபதி தேர்தல் இலங்கை வரலாற்றில் குறிப்பாக சிறுபான்மை இனத்துவ அரசியலின் மிகமுக்கியமான திருப்புமுனையாக கருதப்படும் இவ்வேளையில் இலங்கை முஸ்லிம்களின் ஏக பிரதிநிதிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸின் வகிபாகம் பற்றிய கருத்துகளே முஸ்லிம் ஊடகங்கலை வியாபித்திரிக்கிறது .

   பெரும்பான்மை முஸ்லிம்களின் வாக்கு வங்கியை தனதாக்கிக்கொண்டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் இத்தேர்தலில் தனது ஆதரவை எக்கட்சிக்கு வழங்கப்போகிறது என்பதை முஸ்லிம் காங்ரஸின் அபிமானிகளும் அவர்களைவிட முஸ்லிம் காங்ரஸின் எதிரணியினரும் மிகுந்த கவனத்தோடு எதிர்பார்திரிக்கிரார்கள் .    

   முஸ்லிம் காங்ரஸின் குறைந்த பட்ச ஆதரவு தளமும் , பொதுமக்களும் ஒருபோதும் ஆளும் அரச கட்சியான சுததந்திர முன்னணிக்கு முஸ்லிம் காங்ரஸ் தனது ஆதரவை வழங்கிவிட கூடாது என்பதிலும் , இதற்கு மாற்றமாக செயற்படும் பட்சத்தில் முஸ்லிம் காங்ரஸின் ஆதரவு தளத்தை மூன்றாம் மாற்று அணியொன்று கைப்பற்றுவதிலும் கூடுதல் கவனம் செலுத்துகிறது என்பதே எதார்த்தமான கலநிலவரமாகும் .

   இதற்கு காரணம் ஆளும் அரச கட்சியான சுததந்திர முன்னணியின் ஆட்சிக்காலத்தில்  முஸ்லிம் விரோத சக்திகளினால் இஸ்லாமிய சிறுபான்மைகெதிராக நடந்தேறியே இனவன்முறையை தடுப்பதில் அல்லது அதட்கெதிராக செயற்படுவதில் அரசின் அலற்சியப்போக்குக்கு பதிலடி கொடுக்கவேண்டும் என்பதை மட்டுமே இலக்காககொன்டதால்  ஆட்சி மாற்றதிற்கே  முஸ்லிம் காங்ரஸின் ஆதரவு அமைய வேண்டுமென்பதே பெரும்பான்மை முஸ்லிம்களின் நிலைப்பாடாகும்  .
    
   இதை எவ்வாறு முஸ்லிம் காங்ரஸ் கையாளப்போகிறது ? மக்களின் அபிலாஷைகளுக்கேற்ப  செயற்பட்டு மக்கள் கட்சியாக பரினமிக்கபோகிறதா அல்லது அதற்கெதிராக செயப்பட்டு மூன்றாம் அணியின் அரசியல் வெற்றிக்கு வழிவகுக்க போகிறதா என்பதுதான் அரசியல் அவதானிகளின் கவன ஈர்ப்பை குவிய செய்துள்ள முக்கிய விடயமாகும் .

   யார் ஏற்றுகொண்டாலும் மறுத்தாலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பது இலங்கை முஸ்லிம்களின் தார்மீக சொத்து . அதை தலைநிமிரசெய்வது இன்றைய காலசூழலில் இந்த உம்மத்தின் அரசியல் அபிலாஷைகளை வேன்றடுக்க மிகமுக்கிய காரணியாகும் 
   
   அற்ப ஆசைகளுக்காகவும் சலுகைகளுக்காவும் ஆளுக்கொரு கட்சியும் கூட்டத்திற்கு ஒரு தலைவனுமாக மாறிப்போயுள்ள முஸ்லிம் அரசியல் சூலழலில் மிகசாதூரியமான சானாக்கியமான முடிவை எட்டவேண்டிய கட்டாயம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸிக்கு உண்டென்பதை மறுப்பததற்கில்லை. 

    இந்த பரபரப்பான சூழலில் முஸ்லிம் காங்கிரஸின் அமைதியை மிகலாவகமாக எதிர் தரப்பினர் பயன்படுத்தயுள்ளனர் என்பதே உண்மை சந்திரிக்கா தலைமையிலான பொதுகூட்டமைப்புக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவை வழங்கவேண்டும் என்பதற்காக அக்கூட்டணி சார்பான ஆதரவு மையம் முஸ்லிம் காங்கிரஸின் தலைவரையும் அக்கட்சியின் பேரம் பேசும் சக்தியையும் மலினப்படுத்தும் விதமாக ஊடக செய்திகளை பரவலாக மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்து விட்டது இதுவே முஸ்லிம் மக்கள் மத்தியில் கணிசமான பொது எதிரணியின் ஆதரவு வட்டத்தை வியாபிக்க செய்துள்ளது. 


  இன்னொரு பக்கம் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் பொது எதிரணியில் இணைந்துள்ள முஸ்லிம் கட்சிகளும்  ஸ்ரீலங்கா  முஸ்லிம் காங்கிரஸ் பொது எதிரணியை ஆதரிக்காமல் இருந்தால் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகளை தம்பக்கம் ஈர்த்து வெற்றிவாகை  சூடலாம் என்ற நோக்கில்  பொது எதிரணியில் முஸ்லிம் காங்கிரஸ் இணைவதை தடுக்கும் முயற்சியிலும் அதே சமயம் பொது  வேட்பாளரை  ஆதரித்து நடைபெறும் கூட்டங்களை அக்கட்சிக்கெதிராக பயன்படுத்துவதிலும் தீவிரம் காட்டுகிறது

     இதற்கு காரணம் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட ஊடக யுத்தத்தில் முஸ்லிம் காங்கிரஸின் அலை ஒடுக்கப்பட்டு அதன்வாக்குகள் பொது எதிரணிக்கே வரப்போகிறது எனவே இவர்கள் வருவதை விட வராமல் இருப்பதே  நல்லது  அதுவே சில்லறை கட்சிகளின் சுயநலஅரசியலுக்கு சாதகமானது என்பதே அவர்களின் கணிப்பு 

  இந்த இடத்தில் முஸ்லிம் சமுதாயம் ஒரு விடயத்தை நன்கு சிந்திக்க வேண்டும் இந்த அரசியல் நகர்வில் எந்த ஜனாதிபதி வேட்பாளர் வென்றாலும் சிறுபான்மை இனத்துவத்தின் அரசியல் வெற்றிபெரப்போகிறது காரணம் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சியும் அறிதிப்பெரும்பான்மையை பெறுவது சாத்தியமற்ற ஒன்ராகிவிட்டது. அடுத்து முஸ்லிம்கள் கவனிக்க வேண்டிய இன்னொரு விடயம் எந்த தரப்பு வேட்பாளரை ஆதரித்தால்  இந்த சமூகத்திற்கான வெற்றி தங்கியுள்ளது என்பதையே 
பொதுவாக பார்கையில்  ஆட்சிக்கதிரைக்காக போட்டியிடும் இரண்டு தரப்பும் பேரினவாத சாக்கடையில் திளைத்த கட்சிகள் என்பதில் சந்தேகம் இல்லை 

முதலாவது பொது வேட்பாளர் அணியை  எடுத்துகொண்டால் அவர்கள் பக்கம் சிஹலஉறுமய( இந்த கட்சியின் கொள்கைக்கும் பொதுபலசேனாவின் கொள்கைக்கும் எந்த வித்தியாசமும் இல்லை அது மட்டுமில்லாமல் இந்த இரு கட்சிகளின் உருவாக்கமும் அநாகரீக தர்மபாலாவின் வழிகாட்டலிலேயே உரிவாக்கி செயற்படுத்தபடுகிறது ) என்ற பேரினவாத கட்சி மிக முக்கியமான பாத்திரத்தை வகிக்கிறது அதே போல  சிறுபான்மை முஸ்லிம்களின் எந்தவித தேவையும்மற்ற பொன்சேகா அணி, மற்றும்  முஸ்லிம்கள் மாடறுப்பை தடுக்க மேற்கொண்ட முயற்சியில் பரவலாக தோல்வியை கண்டாலும் இன்றளவும் தடை விதிக்கப்பட்ட இடமாக இருப்பது  மைத்திரியின் பொலநறுவை மாவட்டம் மட்டுமே என்பதும் கவனத்தில் கொள்ளப்படவேண்டிய அம்சமாகும்  இதை விட ஒரு முக்கிய விடயம் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மைத்திரி அணிக்கு ஆதரவழிக்க வேண்டுமானால்  எந்தவித நிபந்தனையும் இன்றி ஆதரவு வழங்கவேண்டும் என்பதுதான் ஒரே ஒரு நிபந்தனை.

  இந்த நிபந்தனையை விதித்த சிஹலஉறுமய பல நிபந்தனைகளை வித்தித்து கைசாத்திட்ட பின்தான்  தங்கள் ஆதரவை வழங்கியுள்ளது இவ்வேளையில்  முஸ்லிம்  காங்கிரஸ் பொதுஎதிரணிக்கு ஆதரவு வழங்க வேண்டுமானால்  அலையாவீட்டின் விருந்தாளியாக சென்றே தனதாரவை வழங்கவேண்டிய ஒரு இக்கட்டில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளது 

ராஜபக்ஷ அணியை எடுத்துகொண்டால் அண்மைய கலவரம் என்பதை விட எதிர்புக்கு பலமான எந்த கோஷமும் முஸ்லிம்களிடத்தில் இல்லை என்பதே உண்மை எனவே இந்த காரணம் எதிரணியினால் ஒரு போதும் நடக்காது என்பதற்கான எந்த உத்தரவாதமும் இல்லை குறைந்த பட்ச உரிமைகளை வென்றெடுக்கும் உறிதிபாட்டையாவது பெறலாம் என்றால் அதூகூட இல்லாத ஆட்சிமாற்றம் என்பது பல உரிமைகள் பறிக்கப்பட்ட ஒருசமுதாயத்திற்கு எந்தவகையிலும் அர்த்தமான ஒரு அளவுகோலாக முடியாது .

இலங்கையின் சிறுபான்மை அரசியல் குறிப்பாக முஸ்லிம்களின் வரலாற்றை எடுத்துகொண்டால் அவர்கள் தங்களின் உரிமைகளை வென்றெடுக்க பயன் படுத்திய ஒரே ஆயுதம்   தேர்தல் ஆதரவு யாருக்கு என்பதை வைத்தே 
இதை இன்னொரு முறையில் சொன்னால் இதுவரை ஆட்சியில் இருந்த பேரினவாத கட்சிகள் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு     அவர்களின் உரிமையை வழங்க முன்வந்த சந்தர்பங்கள் என்றால் அது தேர்தல் வாக்குகளை வைத்தே என்பது தான் நிதர்சனமான  உண்மை
எனவே எதை வைத்து நமது உரிமைகளை வென்றெடுக்க முடியுமோ அந்த சந்தர்பம் பொது எதிரணியினரால்  பெரும் பான்மை சிங்கள வாக்குகளை குறிவைத்து  மிகதெளிவாக மறுக்கப்பட்டு முஸ்லிம் சமூகத்தின் பேரம் பேசும் சக்திக்கு, உரிமைகளை வென்றெடுக்கும் சக்திக்கு மிகப்பெரிய அடியை கொடுத்து ஆணித்தரமாக ஒரு செய்தியையும் சொல்லியுள்ளது அதுதான் பெரும்பான்மை கட்சி அரசியலில் சங்கமாகி நாங்கள் தரும் உரிமை பெற்று கொள்ளுங்கள் என்பதே 

அடுத்த அணியை எடுத்து கொண்டாள் அறுதிப்பெரும்பாண்மை மமதையில் முஸ்லிம்களின் உரிமைகளை மறுத்தாலும் அந்த பெரும்பாண்யில் ஒரு அதிர்வு ஏற்பட்டவுடன்  மீண்டும் அந்த உரிமைகளை தர முன்வந்திரிக்கிறது அது கிடைக்குமா இல்லையா என்பதை எதிர் வரும் நாட்கள்தான் காட்சிபடுத்தும்
இப்படிப்பட்ட ஒரு சூழலில் முஸ்லிம்களின் ஏக பிரதிநிதிகளான முஸ்லிம் காங்கிரஸ் தனது முடிவை இன்னும் அறிவிக்கவில்லை என்றும் திராணியற்ற தலைமைதுவம் என்றும் குற்சாட்டுகளை முன்வைக்க முனைவது   மிக குறிகிய சிந்தனையின் அல்லது சுயநலத்தின் அடிப்படையில் என்பதுதான் உண்மை  

நீங்கள் வந்தாலும் ஒன்று வராமல் இருந்தாலும் ஒன்று என்ற அடிப்படையிலும் முஸ்லிம் மக்களின் வாக்குகள் அவர்களுக்கே என்ற மதையிலும் அலட்சியப்படுத்தும் குழு ஒரு புறமும்  இதுவரைக்கும் உரிமைகளை தர மறுத்த  குழுவினர் அந்த உரிமைகள்( பொது எதிரணியில் உள்ள சிஹலஉருமயவினால் தடுத்து நிருத்தப்பட்டிரிக்கும் நுரசோலை வீட்டு திட்டமும் வென்றெடுக்க படவேண்டிய உரிமைகளில் ஒன்று )  என்ன என்று  அலசுவதற்கும் அதை தருவதற்கு தயார் எனும் அளவுக்கு முன்வந்திரிக்கும் தருணத்தில் அதன் முடிவு என்ன  என்பதை கூட அறியாமல் மக்கள் விரும்புகிறார்கள் என்பதற்காக அல்லது அப்படி ஒரு மாயை உருவாக்கபட்டிறிக்கிறது என்பதற்காக வலிந்து கொண்டு போது எதிரணிக்கு  ஆதரவு கொடுக்க முற்படுவது முஸ்லிம்களின் பெரும்பான்மை ஆதரவை  பெற்ற ஒரு கட்சியின் தலைவனுக்கு அழகல்ல என்பதை ரவூப் ஹகீம் மிகச்சரியாக பயன்படுத்துகிறார் என்றே கூரவேண்டும். 

இந்த தருணத்தில் உணர்வுகளுக்கு அடிமைபட்டு நமக்காக இருக்கும் ஒரே கட்சியை நாமே அழித்துவிட முயற்சிப்பது ஏற்றுகொள்ளும் முடிவாக் அமையாது . ஊடக யுத்ததிற்கு அப்பாற்பட்டு தலைமைத்துவத்தின் முடிவை எதிர்பாத்து அதற்கேற்ப செயப்டுவதுதான் இந்த களநிலவரத்திற்கு சிறந்த முடிவாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை ,

ஒரு வேலை முஸ்லிம் காங்கிரஸினால் ராஜபக்ஷ  அணியிடம் முன்வைகபடும் கோரிக்கைகள் மறுகப்படுமாக இருந்தால்

 முஸ்லிம்களை பொறுத்தவரையில்  இந்த இரு கட்சிகளின் வெற்றிக்காக நமக்குள் அடித்து கொண்டு ஓரளவுக்கேனும் நமக்காக பேசுவற்கு இருக்கும் ஒரு கட்சியையும் அழித்துவிடாமல் இருக்கும் விடயத்தில் முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்களும் பொதுமக்களும் கவனம் செலுத்துவதுதான் மிக சரியான முடிவாக அமையும்

இப்படியான சூழ்நிலை உருவாகுமாக இருந்தால் தங்களின்  கோரிக்கையை மறுக்கும் அணிக்கோ அல்லது அலட்சியப்படுத்தும் அணிக்கோ ஆதரவளிக்காமல் அதை தீர்மானிக்கும் சக்தியாக மக்களை விட்டு விட்டு  அரசின் அமைசு பதவிகளை துறந்து  மக்கள் பிரதி நிதிகளாக சரியான நியாயங்களோடு அவர்கள் முன் சென்று முஸ்லிம் சமூகத்தை உணர்சி பூர்வமாக சிந்திப்பதை விட்டும் தூரமாக்கி சிந்தனை ரீதியாக செயற்பட தூண்டுவதே  கட்சியியை பாதுக்காக்கும் காத்திரமான பணியாகும் அதுவே மீண்டும் மக்கள் கட்சியாக இந்தகட்சியை நிலை நிறுத்தும் 

அல்லது மைத்திரி அணியை தங்களின் பேரம் பேசும் கோட்பாட்டுக்குள் இழுத்து அதன் அடிபடையில் ஆதரவு தளத்தை மாற்ற வேண்டும் 

இந்த இரண்டு சூழ்நிலைக்கும்  மாற்றமாக அற்பசலுகைகளை அள்ளிக்கொண்டு சென்று மக்களை ஏமாற்ற முயன்றால் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் அவர்கள் உங்களை ஏமாற்ற ஒரு போதும் பின் நிற்கமாட்டார்கள் மூன்றாம் அணியின் மடியில் இந்த சமுதாயம் சிக்கி மூச்சு திணற வேண்டிய கட்டாயமும் விதிகப்படலாம்  இப்படிபட்ட ஒரு விரும்பத்தகாத  முடிவுக்கு முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்களை கட்சி கட்டாயப்படுத்தாது என்றே நம்புகிறோம். 

Share it:

Post A Comment:

0 comments: