'ஆயுதத்தைத் தாருங்கள் பாதுகாத்துக் கொள்கின்றோம், எனகேட்டும் அரசு கண்டுகொள்ளவில்லை''

Share it:
ad
(றிப்கான் கே சமான்)

1980ஆம் ஆண்டுகளில் வடபகுதியில் உள்ள முஸ்லிம்களின் உடமைகளை விடுதலைப்புலிகள் சூரையாடிய போது, அப்போது ஆட்சியிலிருந்த ஐ.தே.க முஸ்லிம்களுக்கு சட்டரீதியான ஆயுதத்தையும், பயிற்சியையும் வழங்கி இந்த முஸ்லிம் சமூகத்திற்கு, சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு வழங்கியது என்று வன்னி மாவட்டப்பாராளுமன்ற  உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் அண்மையில் கண்டி அக்குறணையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார். 

அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்.

சிறுபான்மையினருடன் இருக்கின்றோம் என்று, இன்று சொல்லுகின்ற இந்த அரசாங்கம் சிறுபான்மையினரின்  மதத்தை, கலாச்சாரத்தை சுதந்திரமாகப் பின்பற்றுவதில்தடைகள் ஏற்படுகின்ற போது சிறுபான்மையினருக்கெதிராக அநியாயங்கள் நடைபெற்ற போது அதற்கெதிராக இந்த அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கை என்ன?

ஆரம்பத்தில் அநுராதபுரத்தில் ஒரு பள்ளிவாசல் எரிக்கப்பட்டது, அதன் பின்னர் தம்புள்ளையில் ஜும்ஆ தொழுது கொண்டிருக்கும் போது பள்ளிவாசல் மீது கல் எறியப்பட்டது, அடுத்தநாள் அதிகாலை அப்பள்ளிவாசலுக்கு புாட்டு போடப்பட்டது நாங்கள் நேரில் சென்று பார்த்தோம் பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தோம் என்ன நடந்தது.

அன்று ஐ.தே.க வின் ஆட்சிக்காலத்தில் வடபகுதில் விடுதலைப்புலிகள் சிறுபான்மையினருக்கெதிராக செயற்பட்டபோது அந்த அரசாங்கம் முஸ்லிம்களுக்கு சட்டரீதியான ஆயுதத்தையும், பயிற்சியையும் வழங்கி இந்த முஸ்லிம் சமூகத்திற்கு, சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு வழங்கியது.

ஆனால் இன்று அதைவிட மோசமான ஒருநிலை இந்த நாட்டில் சிறுபான்மையினருக்கெதிராக ஏற்பட்டுள்ளது, சட்டமும்,ஒழுங்கும், சமாதானமும் இந்த நாட்டில் ஒழுங்காக இருக்கின்றது என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது அதற்கு மாற்றம் நிகழ்ந்துள்ளது. இதற்கு சான்றாக அளுத்கம. பேருவளை பகுதியில் இடம்பெற்ற வண்முறையைக் கூறலாம். அளுத்கம. பேருவளை முஸ்லிம்களின் சொத்துக்கள் சூரையாடப்பட்டதுடன், அவர்களின் கோடிக்கணக்கான சொத்துக்களும், உயிர்களும் சேதம் செய்யப்பட்டது இந்தவிடயத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து  கடந்த 06ஆம் மாதம் 17ம் திகதி நான் பாராளுமன்றத்திலே முஸ்லிம்களுக்கு சட்டரீதியான ஆயுதத்தைத் தாருங்கள் அல்லாஹ்விற்கு அடுத்தபடியாக  எங்களை நாங்களே பாதுகாத்துக் கொள்கின்றோம் என கேட்டும் செவிடன் காதில் ஊதிய சங்காக இந்த அரசாங்கம் இதை கண்டம் காணாததுமாக இருந்தது.

இந்த நிலை தொடருமானால் முஸ்லிம்களின். சிறபான்மையினரின் இருப்பு இந்த நாட்டில் கேள்விக்குறியாகிப் போய்விடும் என்பதில் எந்த ஐயமும் இல்லை எனவேதான் முஸ்லிம்களின், சிறுபான்மையினரின் இருப்பையும், பாதுகாப்பையும் தக்கவைத்து சிறுபான்மையினரும் இந்த நாட்டின் பிரஜைகள் என்ற அடிப்படையில் சுதந்திரமாக நடமாடுவதற்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்வதற்கும் முஸ்லிம்களின் உரிமையைப் பாதுகாக்கவும் உதித்துள்ள இந்த  கூட்டு ஆட்சியில் நாங்ககள் அனைவரும் ஒன்றிணைவோம் என்றும் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹலீம் அவர்களின்  ஏற்பாட்டில் கண்டி, அக்குறனை அறபா மண்டபத்தில் இடம்பெற்ற ஜனாதிபதி பொது வேற்பாளர் மைத்திரி பால சிறிசேனாவை ஆதரிக்கும் வகையில் இடம்பெற்ற கூட்டத்திலேயே மேற்படி உரையை நிகழ்த்தியிருந்தார் வன்னி மாவட்டப்பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹுனைஸ் பாரூக்.
Share it:

Post A Comment:

0 comments: