விலாசம் இல்லாத மைத்திரி, மஹிந்த இம்முறை கூடுலான வாக்குகளைபெற்று வெற்றியீட்டுவார் - அப்துல் காதர்

Share it:
ad
ஹரிஸ்பத்துவ தேர்தல் தொகுதியில் 70 விகிதமான முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர். இம்முறை நான் இந்த தேர்தல் தொகுதிய அமைப்பாளராக நியமிக்கப்பட்ட பின் பல கோடிக் கணக்கான அபிவிருத்திகள் மேற்கொண்டு வருகின்றேன். எந்த அரசியல்வாதிகளும் செல்ல முடியதாளவு பொது மக்கள் கடும் காட்டாக விமர்சிக்கக் கூடிய இடங்ளுக்குச் சென்று பல அபிவிருத்திகளை மேற்கொண்டு வருகின்றேன். இதற்கு ஜயாதிபதி மஹிந்த ராஜப்கஷ அவர்களே வழிசமைத்துள்ளார் என்று சுற்றாடல் அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஏ, ஆர். எம். காதர் தெரிவித்தார்.

அலவத்துக்கொடவிலிருந்து தெல்கொஸ்கொட செல்லும் வீதிக்கு 2 கோடி ரூபா செலவில் காபட் இடும் வேலைத் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் வைபவம் 06-12-2014 முகமாக கலந்து கொண்ட சுற்றாடல் அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஏ, ஆர். எம். காதர் அங்கு இவ்வாறு இதனைத் தெரிவித்தா,

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்,

கடந்த காலங்களில் இருந்த 30 வருட கொடிய யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து இந்நாட்டுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்தவர் மஹிந்த ராஜபக்ஷ. யார் இந்த மைத்திரி. விலாசம் இல்லாத ஒரு பொது வேட்பாளரென மைத்திரி. கடந்த வருடங்களில் பொது வேட்பாளராகப் போட்டியிட்ட முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடவும் ஒரு வாக்கேனும் குறைவாகத்தான் பெற்றுக் கொள்வார். எமது ஜனாதிபதி கடந்த தேர்தலை இம்முறை கூடுலான வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டுவார் என்பதில் எவ்வித சந்தேகமில்லை.

மைத்தரிபால சிறிசேன கட்சியை விட்டு வெளியேறிச் சென்றமையால் அரசுக்கு அணுவளவேனும் பாதிப்பு கிடையாது இவரை நம்பி எப்படி மக்கள் வாக்களிப்பார்கள்.

அக்குரணை பிரதேசத்தில் கூடுதலாக அபிவிருத்திப் பணிகள் நடைபெற்றுள்ளதாக இங்கு கூறப்பட்டது ஆனால் அங்கும் எந்தவிதமான அபிவிருத்திப் பணிகளும் இடம்பெறவில்லை. எமது ஜனாபதியின் காலத்திலேயே சகல அபிவிருத்திப் பணிகளும் நடைபெற்று வருகின்றது என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் எம். ஆர். எம். அம்ஜாட் அக்குரணை பிரதேச சபை உப தவிசாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இக்பால் அலி


Share it:

Post A Comment:

0 comments: