இலங்கைக்குள் மீண்டும் வன்முறைகளை தூண்டமுயற்சி - கோட்டாபய

Share it:
ad
புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படாத உறுப்பினர்களே இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர் என பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்தாவது,

புலம்பெயர்ந்த தமிழர்களும், விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பும் இன்னமும் தமிழீழக் கோரிக்கையுடனேயே உள்ளன 

எஞ்சியிருக்கும் விடுதலைப் புலிகள் இலங்கையில் மீண்டும் வன்முறையை ஏற்படுத்துவதற்காக மேற்கொண்ட முயற்சிகளை இலங்கை அரசாங்கம் வெற்றிகரமாக முறியடித்துள்ளது.

இருப்பினும் சர்வதேச அளவில் விடுதலைப் புலிகளுடன் தொடர்புள்ள சில குழுக்கள் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றியளித்துள்ளன. 

பயங்கரவாத கொள்கைகளுடன் இயங்கும் குழுக்களுக்கு  சர்வதேசத்தில் உள்ளவர்கள் நிதியுதவி வழங்குகின்றனர்.  அத்துடன் இலங்கைக்குள் மீண்டும் வன்முறைகளை தூண்டவும் முயல்கின்றனர். 

புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படாத உறுப்பினர்களே இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக அமைகின்றனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளது. 
Share it:

Post A Comment:

0 comments: