முஸ்லிம் சமூகத்தின் நிலைப்பாடு எவ்வாறு அமையவேண்டும்...?

Share it:
ad
ஐ.எல்.தில்ஷாத் முஹம்மத் (கபூரி)

இலங்கை அரசியல் வரலாற்றில் முன்னெப்பொழுதும் இல்;லாத ஒரு அரசியல் நெருக்கடி, பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேனவின் வருகையுடன் ஆரம்பித்திருக்கிறது. எந்த ஒரு விடயமும் இறுதி நேரத்தில் மக்கள் தங்களது மனதை மாற்றி செயல்பட வைக்கக் கூடிய ஒரு நிலைமையே இந்நாட்டின் அரசியல் வரலாறாகும்.

மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொண்டு சகல அரச வளங்களும் மக்களுக்காக மாணியமாக வளங்கப்பட்டக்கொண்டிருந்த முன்னால் பிரதமர் டட்லிசேனாநாயக்க ஆட்சியினை மறந்த மக்கள், சிரிமாவே பண்டாரநாயக்காவின் வெரும் பகட்டு வார்த்தைகளுக்கு ஏமார்ந்து வாக்களித்து அனுபவித்த கொடுமைகளை இன்னும் மறந்திருக்க மாட்டடார்கள்.

முஸ்லிம் காங்கிரஸும் தனது நிலைப்பாட்டினை அறிவிப்பதில் இவ்வளவு காலமாக இழுத்தடிப்பது இதனால் தானோ என எண்ணத்தோன்றுகின்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீதும் அவரது ஆட்சியின் மீதும் என்னதான் வெறுப்பிருந்தாலும் கடைசி நேரத்தில் மக்கள் (நாட்டில் தாண்டவமாடிய கொடூர யுத்தத்தினை நிறைவிற்கு கொண்டு வந்தார் என்ற ஒரே காரணத்திற்காக) ஜனாதிபதியை ஆதரித்தாலும் அதியமொன்றுமில்லை. போலி சலுகைகளையும் வெற்று வாக்குறுதிகளையுமே நம்பி வாழ்கின்ற இந்நாட்டு மக்களின் (அ)கௌரவ அரசியல் பண்பாடே இது.

இந்நாட்டு மக்களின் கொள்கையும் போக்கும் எவ்வாரானதாகவும் இருக்கட்டும். இலங்கை முஸ்லிம்களை பிரதிநிதிப்படுத்தும்; கட்சி என்று எல்லோராலும் எற்றுக் கொள்ளப்பட்டுள்ள முஸ்லிம் காங்கிரஸ் தீர்க்கமாக ஒரு விடயத்தை புரிந்து கொள்ள கடமைப்பட்டுள்ளது. அமைச்சு பதவிகளுக்கும் அரச உயர் பதவிகளுக்கும் பேரம் பேசுகின்ற சந்நர்ப்பமாக இன்றைய அரசியல் சூழ்நிலையை மு.கா. ஒருபோதும் பயண்படுத்தக் கூடாதென்பது பொதுவான அபிப்பராயமாகும். 

பொதுவேட்பாளர் மைத்திரிபாலவை ஆதரிக்க முன்வந்த எத்;தனயோ அரசியல் அமைப்புகள் எதுவித நிபந்தனைகளையும் விதித்து கூட்டு சேரவில்லை. இலங்கை அரியல் அமைப்பில் காணப்படும் நிறைவேற்று ஜனாதிபதி முறையினை மாற்ற வேண்டும் என்பதில் எல்லோரும் உடன்பட்டிருக்கின்றனர். எனவே மு.கா இச்சந்தர்ப்பத்தில் தனது வழமையான பேரம் பேசுதலை மட்டும் முன்னிலைப்படுத்துவார்களெனில் அவர்கள் மீண்டுமொரு வரலாற்று தவரை செய்தவர்களாக அடையாளப்படுத்தப்படுவார்கள். 

தேசிய அரசியல் நீரோட்டத்தில் இருந்து தான் சார்ந்த, இனம் சார்ந்த அரசியல் கயவர்களாக கருதப்படக்கூடும். ஏன் சிலவேளைகளில் தேசிய முஸ்லிம் சமூகமுமே ஓர் அந்நியப்பார்வை கொண்டு பார்க்கப்படவும் முடியும். எனவே சிந்தனையும் நோக்கமும் சீரியவையாக இருக்க வேண்டும். தான் விளையாடுகின்ற அரசியல் சதுரங்க விளையாட்டில் முஸ்லிம் சமூகம் பலிகடாவாகக்கூடாது. 

முஸ்லிம் காங்கிரஸின் பலம் பலவீனம் என்ன என்பதை ஏனைய அரசியல் கட்சிகளும் இலங்கை வாழ் முஸ்லிம்களும் நன்கறிந்திருக்கின்றனர். கடந்த காலங்களில்; இலங்கை முஸ்லிம்களுக்கு அரசியல் ரீதியாகவும், பேரினவாதிகளின் சதிகளினால் சமய ரீதியாகவும் ஏற்பட்பட்ட பிரச்சினைகளின் போதும் மு.கா தலைமை நடந்து கொண்ட விதம் நன்றியுள்ள எல்லோராலும் இன்றுவரை பாராட்டப்படுகின்றது. இது இலங்கை முஸ்லிம்களின் அரசியலில் மு.கா வின் அவசியம் உணரப்படுகின்ற ஒரு நிலைமையாகும். 

எது எப்படியாயினும்; இன்றுவரை, நடைபெறப்போகும் தேர்தல் விடயத்தில் ஓரு தெளிவான நிலைப்பாட்டில் இலங்கை வாழ் மக்கள் இருக்கின்றனர் என்பதை கலநிலவரங்கள் தெளிவுபடுத்துகின்றன. இது சந்திரிக்கா அம்மையார் முதன் முதலில் ஜனாதிபதித் தேர்தலுக்காக களமிறங்கிய நிலையினை ஒத்ததாக இருக்கிறது. அன்றிருந்த மு.கா தலைவர் மர்ஹும் அஷ்ரப் கலநிலவரத்தை சரியாக பயண்படுத்தி தன்னை ஒர்; அழுமைமிக்க, ஜனாதிபதிக்கு மிக நெருக்கமான ஒருவரானார். அதனால் அவர் சாதித்த விடயங்களும் ஏராளம்.

அன்றிருந்த அரசியல் நிலைமையும் கட்சி கோட்பாடும் தலைமைக்கு கட்டுப்படும் பண்புகளும் இன்று மு.கா வினுல்லும்; தேசிய அரசியலிலும் இல்லை என்பதில் நானும் உடன்படுகின்றேன். இன்றைய மு.கா வின் அசமந்த போக்கு மு.கா விற்கு ஒரு மோசமான முடிவை கொண்டுவந்து தருமோ என்ற அச்ச உணர்வு ஒவ்வொரு மு.கா ஆதரவாளர்களிடத்தும் இருக்கிறது. கடைசி நேரத்தில் எடுக்கபடும் தீர்மானம் சில போது செல்லாக்காசியாகி விடவும் கூடும். பயணிகளால் நிறைந்து காணப்படும் பஸ் வண்டி எப்படி பாதையோரங்களில் நின்று கையசைத்து ஏறக்காத்திருக்கும் கூட்டத்தினரை கணக்கிலெடுக்காதோ அந்த நிலை ஏற்படுவதிலிருந்து மு.கா தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும்.

எந்தத் தேர்தலாயினும் சரி முஸ்லிம் சமூகம் தூரநோக்குடன் செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். தேர்தல்கள் அல்லாஹ் எமக்களிக்கின்ற வரப்பிரசாதங்களாகும். இங்கு நடைபெருகின்ற எந்த தேர்தலாயினும் அவை இஸ்லாமிய ஆட்சிக்கான, அல்லாஹ்வின் சட்டங்களை நிலைநாட்ட நடைபெருகின்ற தேர்தல்கள் அல்ல. ஆயினும் அசுத்தங்களில் மிகக் குறைந்தளவான அசுத்தத்தை தேர்ந்தெடுக்க வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமையாகும்.

அல்லாஹ் அல் குர்ஆனில் 'உங்கள் நிலைமைகளை நீங்களாக மாற்றிக் கொள்ளாத வரை அல்லாஹ் அவற்றை மாற்ற மாட்டான்' எனக் குறிப்பிடுகின்றான். இதன் அடியாக இன்றைய அரசியல் நிலைமைகளை கீழ்வரும் விதமாக விளக்கலாம்.

இன்றைய உலக நாடுகளின் அமைப்பை இமாம்கள் இருவகையான நோக்குகின்றனர். 
1. தாருல் இஸ்லாம் (இஸ்லாமிய சட்டங்களை அரசியல் யாப்பாக கொண்டு செயல்படும் நாடுகள்) 
2. தாருல் ஹர்ப் (இஸ்லாமிய மரபுகளை பேணுவதற்கு தடையாக செயல்படும் நாடுகள்)
இமாம் இப்னு ஹஜர் ரஹ்மதுல்லாஹ் அவர்கள் 'இஸ்லாமிய வணக்கங்களை நிறைவேற்ற அனுமதியும், இஸ்லாமிய நடைமுறைகளைப் பேண பொது அனுமதியும் இருக்குமாயின் அந்நாடுகள் பெரும்பான்மை அந்நியர்களைக் கொண்டதாயிருப்பினும் அந்நாட்டை தாருல் இஸ்லாம் என்றே அழைக்கப்படும்' எனக் கூறுகின்றார்கள்.

எனவே தாருல் இஸ்லாம் என்கின்ற நிலையிலிருந்து நாம் இந்நாட்டையும், தேர்தல்களையும் நோக்கும் போது இஸ்லாமிய அடிப்படை விதிகள் கூறுகின்ற விடயங்களை சிலவற்றின் தெளிவு தேவைப்படுகின்றது.

1. எந்த விடயமாயினும் அதற்கான நோக்கங்களை வைத்தே தீர்மாணிக்கப்படும்.
2. ஓன்றை அடைந்து கொள்ள இன்னுமொன்றை செய்தாக வேண்டுமாயின் அந்த 'இன்னுமொன்று' கடமையாகும்.
3. தீமைகளுக்கு இட்டுச் செல்லும் வழிகளை இல்லாமலாக்குதல் ஒவ்வொரு முஸ்லிமினதும் சமூகக்கடமையாகும்.
4. நிர்ப்பந்தங்கள், சில கட்டாயங்கள் அனுமதிக்கப்படாவற்றிற்கும் அனுமதியளிக்கும்.

இலங்கை முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள் சலுகைகள் அரசியல் போராட்டத்தின் மூலமே பெறவேண்டியிருக்கிறது எனின் ஷரீஆவிற்கு மாற்றமான சில விடயங்களை கொண்டுள்ள யாப்பை ஏற்று சத்தியப்பிரமானம் செய்வதும் அனுமதிக்கப்பட்டதாகும். மேலே குறிப்பிடப்பட்ட விதிகளுக்கமைய அரசியலில் கலந்து கொள்வதும், வாக்களிப்பில்; பங்கெடுப்பதும் இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்தின் கடமையாகும்.

ஆனால் இங்கு மிக முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய விடயம் யாதெனில் அரசியலில் ஈடுபடும் போதும், வாக்களிப்பில்; பங்கெடுக்கும் போதும் தன் சொந்த நலனை முற்படுத்தக்கூடாது. தான் சார்ந்த சமூகத்தின் நலனும் தேசிய நலனும் முதன்மைப்படுத்தப்பட வேண்டும். 

மேற்சொன்ன விடயங்களை கருத்திற்கொண்டு அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் வருகின்ற தேர்தலை தீhமாணிக்கக் கடமைப்பட்டுள்ளனர். ஓவ்வொரு தேர்தலும் முஸ்லிம் சமூகத்திற்குள் பிளவுகளையும் பிரிவினைகளையும் கொண்டுவந்தே சேர்த்திருக்கின்றன. இவை தேர்தலுக்கு முன்னரும் பின்னரும் சர்வசாதரணமாக இடம்பெருவது இயல்பானதே. பெரும்பான்மை சமூகம் தங்களுக்குள் பிரிவுகளையும் பிளவுகளையும் ஏற்படுத்திக் கொள்வது சமூகமட்டத்தில் அவர்களுக்கு பாரிய தாக்கம் எதனiயும் செலுத்துவதில்லை. ஆனால் சிருபான்மை சமூகத்தின் நிலைமை நேர்மாற்றமானதாகும் என்பதை அரசியல்வாதிகளும் அரசியல் கட்சிகளும் ஞாபகத்தில் வைத்துக் கொள்வது முஸ்லிம் சமூகத்திற்கு ஆரோக்கியமானதாக இருக்கும்.

நல்ல முடிவுகளைத்தர அல்லாஹ் போதுமானவன்.
Share it:

Post A Comment:

0 comments: