அல் முனீர் அஹதிய்யா பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா (படங்கள் இணைப்பு)

Share it:
ad
நாங்கூறுகம அல் முனீர் அஹதிய்யா பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா சென்ற 14ம் திகதி ஞாயிறு காலை 8.30 மணியளவில் நாங்கூறுகம முஸ்லிம் வித்யாலயத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. 

நாங்கூறுகம அல் முனீர் அஹதிய்யா பாடசாலையின் பரிசளிப்பு விழா நிகழ்ச்சிகள் ஆரம்பம் முதல் இறுதிவரை மாணவர்களால் ஒழுங்கு படுத்தப்பட்டு நடாத்தப்பட்டமை ஒரு விஷேட அம்சமாக பலராலும் நோக்கப்பட்டது. 

நிகழ்சிகள் மாணவன் எம்.என்.எம்.ஷுரைபின் இனிய கிராஅத்துடன் ஆரம்பமானதைத் தொடர்ந்து மாணவிகளான எம்.எம்.எப்.முர்ஷிதா மற்றும் ஏ.எப்.சுமையா ஆகியோரால் அனைத்து நிகழ்ச்சிகளும் நெறிப்படுத்தப்பட்டு தொகுத்து வழங்கப்பட்டன.

நாங்கூறுகம அல் முனீர்; அஹதிய்யா பாடசாலையின் அதிபர் மௌலவி எம்.எப்.எம்.ஹஸன்; (ஸஹ்ரி) தலைமை உரையினை நிகழத்தினார். தொடர்ந்து நாங்கூறுகம அல் முனீர் அஹதிய்யா பாடசாலையின் நிர்வாகத்தின் தலைவர் அல் ஹாஜ் ராஸிக்; நாங்கூறுகம அல் முனீர்; அஹதிய்யா கடந்து வந்த பாதைகளின்; பசுமையான நினைவுகளை சபையோர் மனக்கண்முன் கொண்டுவந்தார். தொடர்ந்து மாணவர்களின் நிகழ்ச்சிகளுக்கிடைக்கிடையே விஷேட அதிதிகளான மௌலவி ஐ.எல்.தில்ஷாத் முஹம்மத் (கபூரி), நாங்கூறுகம முஸ்லிம் வித்தியாலயத்தின் அதிபர் கௌரவ முபாரக், இலங்கை பத்திரகை கட்டுப்பாட்டு தினைக்களத்தின் நிரைவேற்று பணிப்பளரும் நாங்கூறுகம அல் முனீர் ஜும்ஆ பள்ளி மற்றும்; அல் முனீர் அஹதிய்யா ஆகியவற்றின் செயளாலருமான அல் ஹாஜ் எம்.எஸ்.எம் அமீர் ஹுஸைன், மௌலவி அல்ஹாபிழ் உபைதுர்ரஹ்மான், அல் முனீர் ஜும்ஆ பள்ளிவாயிலின் உபதலைவர்களுல் ஒருவரான் கௌரவ ஸாலிஹ் ஏ. மஜீத் ஆகியோரும் சிந்தனைக்கு விருந்தாக பல்வேறு கருத்துக்களை முன்வைத்தனர்.
 நடந்து முடிந்த கலைநிகழ்ச்சிகளிலும் போட்டிகளிலும் முதலாம் இடங்களைப்; பெற்ற மாணவ மாணவிகளின் நிகழ்ச்சிகளும் சபையோர் முன் அறங்கேற்றப்பட்டன.

தொடர்ந்து விழாவின் விஷேட அதிதியான ஸபுமல் நிருவனத்தின் ஸ்தாபகத்தலைவரும் அல் முனீர் ஜும்ஆ பள்ளியின் தலைவரும் நாங்கூறுகம அல் முனீர் அஹதிய்யா பாடசாலையின் போசருமான அல்ஹாஜ் டப்லியு.எம்.எம்.எஸ்.எம்.கமால்தீன் மரைக்கார் அவர்களின் உரை இடம்பொற்றது. மாணவர்களின் நிகழ்ச்சிகளின் இறுதி நிகழ்ச்சியாக எல்லோராலும் ஆவலுடன்; எதிர்பார்க்கப்பட்ட நாங்கூறுகம அல்முனீர் அஹதிய்யா மானவர்களின் இருகுழுக்களுக்கலான தாருல் மகாம் மற்றும் தாருஸ்ஸலாம் அணிகளுக்கிடையிலான அறிவுக்கலஞ்சியம் இடம்பெற்றது. தாருல் மகாம் அணியினர் அதிகூடிய புள்ளிகள் பெற்று வெற்றியீட்டினர்.

நிகழ்வின் இறுதியம்சமாக நாங்கூறுகம அல் முனீர் அஹதிய்யா பாடசாலையின் வளர்ச்சியில் அயராது பணத்தாலும் பொருளாலும் பங்களிப்புகள் செய்துகொண்டிருக்கும் அதன் போசகரான அல்ஹாஜ் டப்லியு.எம்.எம்.எஸ்.எம்.கமால்தீன்; மரைக்காருக்கு நாங்கூறுகம அல் முனீர் அஹதிய்யா பாடசாலையின் ஆசிரியர் குலாம் சார்பாக ஓர்; நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். தொடர்ந்து வெற்றியீட்டிய மாணவர்கள் சான்றிதழ்களும் பரிசில்களும் விஷேட அதிதிகளினால் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். 

இறுதியாக நாங்கூறுகம அல் முனீர் அஹதிய்யா பாடசாலையின் ஆசிரியர்களுள் ஒருவரான மௌலவி முஹம்மத் காமில் (கபூரி) அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சிகள் யாவும் துஆவுடன் இனிதே நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.



Share it:

Post A Comment:

0 comments: