தேர்தல் முடிவுகளை எதிர்வரும் காலங்களில் வெளியிடும் பொறுப்பு தேர்தல் திணைக்களத்திற்கு உரியது என ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இதுவரை காலமும் முடிவுகளைத் தெரிவிக்கும் பணிக்குப் பொறுப்பாக அரச தகவல் திணைக்களத்திடமிருந்தது. எனினும் இம்முறை நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் இருந்து தேர்தல் திணைக்களம் பெற்றுக் கொண்டுள்ளது.
இதுகுறித்து மேலும் தெரிவிக்கையில்,
இதுவரை காலமும் முடிவுகளை அறிவிக்கும் பணி அரச தகவல் திணைக்களத்திடமிருந்து தேர்தல் திணைக்களத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
அரச தகவல் திணைக்களத்தில் அரசியல் ஊடுருவல்கள் மிகுந்துள்ளதாக தேர்தல் திணைக்களத்திற்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. இவற்றைக் கவனத்தில் கொண்டே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.



Post A Comment:
0 comments: