சாய்ந்தமருது மக்களின் நீண்ட நாள் அவாவாக இருந்த சாய்ந்தமருதுக்கு என உள்ளுராட்சிசபை என்ற தேவை எதிர்வரும் ஜனவரி 5ல் நகரசபை என்ற அந்தஸ்த்தை பெறக்கூடிய வாய்ப்பிருப்பதாக 29-12-2914 சாய்ந்தமருது பிரதான வீதியில் இடம்பெற்ற, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களை ஆதரித்து தேசிய காங்கிரசின் தேசியத்தலைவரும் மாகாணசபைகள் உள்ளுராட்சி அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் பங்குகொண்ட கூட்டம் கல்முனை மாநகரசபையின் முன்னாள் முதல்வரும் தற்போதைய மாகாணசபைகள் உள்ளுராட்சி அமைச்சரின் ஆலோசகருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் இடம்பெற்றது.
சாய்ந்தமருது மக்களினால் நீண்ட நாட்களாக முன்வைக்கப்படும் உள்ளுராட்சி மன்றக்கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றித் தருவதாகவும் சாய்ந்தமருதுக்கு நகரசபை வழங்கப்படும் அதேவேளை கடந்தகாலங்களில் கல்முனைப்பிரதேசம் இருந்தது போல் நான்குசபைகளாக பிரிக்கப்படும் என்றும் இங்கு மேற்கொள்ளப்பட திட்டமிடப்பட்டுள்ள திட்டமானது கல்முனைப் பிரதேசத்தில் இருக்கும் எந்த ஊருக்கோ சமூகத்துக்கோ அநீதி இளைக்கப்படாததாகவும் அமையும் என்றும் இங்கு உரையாற்றிய அதிதிகளால் கூறப்பட்டது.
நிகழவில் கிழக்குமாகான வீதி அபிவிருத்து அமைச்சர் எம்.எஸ். உதுமாலெவ்வை,கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஐ.பீ.ரகுமான், மாநகரசபை உறுப்பினர்ஏ.எம்.ரியாஸ் அவர்களும் பெரும்திரளான மக்களும் கலந்து கொண்டனர்.






Post A Comment:
0 comments: