(பழுலுல்லாஹ் பர்ஹான்)
முஸ்லிம்களை பற்றி கணக்கெடுக்கமால் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடாத்திய பொறியியலாளர் அப்துர் ரஹ்மாணுக்கு- பொருளாதார அபிவிருத்தி பிரதயிமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வை பற்றி பேச அருகதை கிடையாது என காத்தான்குடி நகர சபை உறுப்பினர் எம்.எஸ்.எம்.சியாட் ஜேபி தெரிவித்தார்.
மக்களுக்காக குரல் கொடுக்க திராணியில்லாத ஹிஸ்புல்லாஹ்வின் கருத்துக்களை முஸ்லிம் சமூகம் கணக்கெடுக்கப் போவதில்லை என பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கைக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் காத்தான்குடி நகர சபை உறுப்பினர் எம்.எஸ்.எம்.சியாட் விடுத்துள்ள அறிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது .
விடுதலை புலிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்ற தமிழ் தேசிய கூட்டமைப்போடு உங்களுடைய சுயலாபத்திற்காக முஸ்லிம் சமூகத்தை சிந்திக்காமல் சீர்குழைத்ததை நீங்கள் மறந்துவிட்டிரீகளா ? பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அவர்களே இன்னொரு பிரபாகரணை உருவாக்க முயற்ச்சி செய்து கொண்டிருக்கும் கூட்டமைப்போடு நீங்கள் தொடர்பு வைத்துக்ககொண்டு பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வை மக்களுக்காக குரல் கொடுக்க திராணியில்லாதவர் என்று கூறுவது வேடிக்கையாக இருக்கிறது.
முஸ்லிம்களின் நலனுக்காகவும்,மட்டக்களப்பு மாவட்ட மக்களின் உயர்வுக்காகவும், அபிவிருத்திக்காவும் இரவு பகலாக இன மத மொழி பேதமின்றி பாடுபட்டுவரும் சிரேஷ்ட பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் பணிகளை சகித்துக் கொள்ளாமல் இவ்வாறான இழிவான அறிக்கையை விட முன்வந்தமையானது உங்களின் சுயலாபத்தை தெளிவுபடுத்துகின்றது.
நீங்கள்; எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிரிசேனவை ஆதரிப்பது என்றால் அவரை ஆதரியுங்கள் அதைவிட்டு விட்டு உங்கள் சுய நலத்திற்காகவும், உங்களுடைய அரசியல் பழிவாங்களுக்காகவும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வை அடகு வைக்க வேண்டாம்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவோடு முஸ்லிம் மக்கள் எந்த கோபமும் இல்லை அதை நானும் எமது நாட்டு முஸ்லிம்களும் அறிந்த விடயமே .பொது பல சேனா போன்ற அமைப்புக்களால் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே காரணம் என்று எமது நாட்டு முஸ்லிம் மக்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.
எமது நாட்டு தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒருபோதும் சிறு பான்மை மக்களுக்கு எதிராக செயற்படமாட்டார் என்பதை கருத்தில் கொண்டு இத் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு முஸ்லிம் மக்கள் வாக்களிக்க வேண்டுமெனவும்,உங்கள் அரசியல் சுயலாபத்திற்பாக பிரதியரைமச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக அறிக்கை விடுவதை நிறுத்திக் கொள்ளுமாறும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாக காத்தான்குடி நகர சபை உறுப்பினர் எம்.எஸ்.எம்.சியாட் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


.jpg)
Post A Comment:
0 comments: