யூசுப் அல்கர்ழாவி மீது சர்வதேச பொலிஸ் பிடியாணை

Share it:
ad
சர்வதேச முஸ்லிம் அறிஞர்கள் ஒன்றியத்தின் தலைவரும் முன்னணி இஸ்லாமிய அறிஞருமான கலாநிதி யு+சும் அல் கர்ழாவி மீது சர்வதேச பொலிஸான இன்டர்போல் பிடியாணை பிறப்பித்துள்ளது. எகிப்து அரசின் கோரிக்கைக்கு அமையவே இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கர்ழாவி மீது எகிப்;து நீதித்துறை வன்முறையை தூண்டியது, திட்டமிட்ட கொலைகளுக்கு உதவியது. கைதிகள் தப்பிக்க உதவியது, கலவரம், காழ்ப்புணர்ச்சி மற்றும் திருட்டு என பல குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன. இதனையொட்டியே இன்டர்போல் அவர் மீது 'சிவப்பு எச்சரிக்கை' விடுத்துள்ளது.

எகிப்தில் பிறந்து தற்போது கட்டாரை மையமாகக் கொண்டு செயற்பட்டு வரும் 88 வயதான கர்ழாவி எகிப்தில் தடைசெய்யப்பட்டிருக்கும் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புடன் நெருங்கிய தொடர்பு கொண்டவராவார். அல் ஜஸீரா தொலைக்காட்சியில் இவர் நடத்திவரும் மத விவகாரம் குறித்த நிகழ்ச்சிகளை உலகெங்கும் பல மில்லியன் மக்கள் பார்த்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு எகிப்தில் இடம்பெற்ற இராணுவ சதிப்புரட்சி மூலம் இஸ்லாமியவாதியான ஜனாதிபதி மொஹமட் முர்சி பதவி கவிழ்க்கப்பட்டதை கர்ழாவி கடுமையாக எதிர்த்து வருகிறார். எகிப்தின் தற்போதைய ஜனாதிபதியான அப்தல் பத்தாஹ் அல் சிசி ஒரு நயவஞ்சகன் என்று அவர் குற்றஞ்சாட்டுகிறார்.

இதன்போது இன்டர்போலினால் கர்ழாவியுடன் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புடன் தொடர்புபட்ட 40 க்கும் அதிகமானவர்கள் மீது பிடியாணை பிறப்பிக்கட்டது.

ஒரு குறிப்பிட்ட நாட்டின் நீதித்துறையின் கோரிக்கைக்கு அமையவே இன்டர்போல் தனது 190 அங்கத்துவ நாடுகளுக்கும் 'சிவப்பு எச்சரிக்கை' அறிவிப்பை விடுக்கிறது.
Share it:

Post A Comment:

0 comments: