ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுபவர்கள் இவர்கள்தான் (விபரம் இணைப்பு)

Share it:
ad
ஜனவரி 08ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் இன்று ராஜகிரியவிலுள்ள தேர்தல் செயலகத்தில் கையேற்கப்படவுள்ளன.

வேட்புமனுக்கள் கையேற்பு இன்று காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணிவரை ஏற்றுக் கொள்ளப்படவுள்ளன. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் செயலகம் பூர்த்தி செய்து ள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

இதேவேளை, நேற்று (7) நண்பகல் 12 மணியுடன் ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்துவது முடிவுக்கு வந்தது. இதற்கிணங்க 19 வேட்பாளர்கள் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

தேர்தலில் போட்டியிடவுள்ள 19 வேட்பாளர்களும் இன்றைய தினம் சுப நேரத்தில் தேர்தல்கள் செயலகத்திற்கு நேரில் வருகை தந்து தமது வேட்பு மனுக்களை கையளிக்கவுள்ளனர்.

இவர்களுள் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிரணியின் பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேன ஆகியோர் முக்கியமானவர்களாவர். ஜனாதிபதி தேர்தலில் இவர்களிருவருக்குமிடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. வேட்பு மனு கையேற்பினை முன்னிட்டு ராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலகப் பிரதேசம் பாதுகாப்புப் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அப்பகுதியெங்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் போக்குவரத்து சேவை மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொலிஸார் ராஜகிரிய பிரதேசத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள னர்.

வேட்பு மனு கையளிக்கப்பட்டதை தொடர்ந்து எப் பிரதேசத்திலும் ஊர்வலங்களை நடாத்துவதற்கு பொலிஸ் திணைக்களம் முற்றாக தடை விதித்துள்ளதுடன் அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடவேண்டாமெனவும் அரசியல் கட்சி ஆதரவாளர்களிடம் பொலிஸ் பேச்சாளர் வேண்டுகோள் முன்வைத்துள்ளார்.

கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்களும் கட்சிகளின் செயலாளர்களும் அனுமதிக்கப்பட்ட பிரதிநிதிகளும் மாத்திரமே தேர்தல் வளாகத்துக்குள் அனுமதிக்கப்படுவர். பொது மக்கள் எவரும் தேர்தல் வளாகப் பகுதிக்குள் பிரவேசிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

இதுவரை கட்டுப்பணம் செலுத்தியிருப்பவர்களுள் 17 வேட்பாளர்கள் அங்கீகரிக்ப்பட்ட அரசியல் கட்சிகள் சார்பிலும் ஏனைய இருவர் சுயேச்சைகள் சார்பிலும் தேர்தலில் போட்டியிடவுள்ளனர்.

இவர்களுள் இரண்டு முஸ்லிம்களும் ஒரு தமிழரும் வேட்பாளராக களமிறங்கியுள்ளனர்.

கட்டுப்பணம் செலுத்தியவர்களின் முழு விபரம் வருமாறு,

வேட்பாளரின் பெயர் - கட்சி

1. பத்தரமுல்லே சீலரத்ன தேரர் - ஜனசெத பெரமுன

2. திரு. எம்.பி. தெமிணிமுல்ல ஒக்கொம வெஸியோ - ஒக்கொம ரஜவரு அமைப்பு

3. திரு. பாணி விஜேசிறிவர்தன - சோசலிச சமத்துவக் கட்சி

4. திரு. சிறிதுங்க ஜயசூரிய - ஐக்கிய சோசலிச கட்சி

5. திரு. ராஜபக்ஷ பேர்சி மஹேந்திர - ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி

6. திரு. ஜயந்த குலதுங்க - எக்ஸத் லங்கா மகா சபா

7. திரு. விமல் கீகனகே - இலங்கை தேசிய முன்னணி

8. திரு. பள்ளே வத்தே கமராலலாகே - புதிய ஜனநாயக முன்னணி மைத்திரீபால யாப்பா சிறிசேன

9. திரு. ஐ.எம். இல்யாஸ் - சுயேச்சை

10. திரு. இப்றாஹிம் நிஸ்தார் மொஹமட் மிப்லார் - ஐக்கிய சமாதான முன்னணி

11. திரு. பொல்கம்பல ராளலாகே - சுயேச்சை சமிந்த அநுருத்த பொல்கம்பல

12. துரு. துமிந்த நாகமுவ - முன்னிலை சோஷலிஸ கட்சி

13. திரு. ஏ.எஸ்.பீ. லியனகே - ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சி

14. திரு. சுந்தரம் மகேந்திரன் - நவ சம சமாஜக் கட்சி

15. திரு. கட்டுகம்பல அப்புகாமிலாகெ - ஜனநாயக தேசிய இயக்கம் பிரசன்ன பிரியங்கர

16. திரு. ராஜபக்ஷ ஆரச்சிலாகே - எமது தேசிய முன்னணி நாமல் அஜித் ராஜபக்ஷ

17. திரு. ரத்நாயக ஆரச்சிகே சிறிசேன  - தேசப்பற்றுள்ள தேசிய முன்னணி

18. திரு. சரத் மனமேந்திர - நவ சிஹல உறுமய

19. திரு. ருவன்திலக்க பேதுரு ஆரச்சி - எக்சத் லங்கா பொதுஜன பக்ஷய
Share it:

Post A Comment:

0 comments: