எத்தனை கொடுமைகள்..!

Share it:
ad
அமெரிக்க உளவுப் பிரிவான சி.ஐ.ஏ. மேற்கொண்ட புலனாய்வு விசாரணை முறைகள் நம்பப்பட்டதை விடவும் கொ^ரமாக இருந்தமை அந்நாட்டு செனட் சபை வெளியிட்ட அறிக்கை மூலம் அம்பலமாகியுள்ளது.

சர்ச்சைக்குரிய இந்த விசாரணை முறைகள் கொடுமையானது மற்றும் திறனற்றது என்று விமர்சித்திருக்கும் செனட் சபை இவ்வாறான முறைகளை கையாண்டதற்கு சி.ஐ.ஏவை கடுமையாக சாடியுள்ளது. செனட் அறிக்கையின்படி சி.ஐ.ஏ. கையாண்டிருக்கும் ஒருசில விசாரணை முறைகள் கொ^ரமானது, தவறானது மற்றும் எதிர்விளைவை ஏற்படுத்தக்கூடியது என்று அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா குறிப்பிட்டுள்ளார்.

செப்டெம்பர் 11 இரட்டை கோபுர தாக்குதலுக்கு பின்னர் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் கீழ் சி.ஐ.ஏ. மேற்கொண்ட புலனாய்வு விசாரணைகள் குறித்த அறிக்கையையே செனட் சபை கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. இந்த அறிக்கை வெளியாவதையொட்டி உல கெங்குமுள்ள அமெரிக்க வளாகங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

6,700 பக்கங்கள் கொண்ட முழு விசாரணை அறிக்கையில் 500 பக்கங்கள் மாத்திரமே வெளியிடப்பட்டுள்ளது. எஞ்சிய பக்கங்கள் தொடர்ந்தும் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. இதில் 2001 முதல் 2009 காலத்தில் தீவிரவாத குற்றச்சாட்டுக்கு உள்ளான சுமார் 100 பேர் நடத்தப்பட்ட விதம் குறித்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

சில நேரங்களில் தடுத்து வைக் கப்பட்டோர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை முறையானது சித்திரவதையை ஒத்தி ருந்ததாக செனட் சபை புலனாய்வுக் குழு வின் தலைவர் டையான் பெயின்ஸ்டைன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் மீது 2001 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பின்னர் அமுல்படுத்தப்பட்ட இந்த விசாரணை முறைகள் காரணமாக ஒரு தடவை கூட, தீவிரவாதிகளிடம் இருந்து வரக்கூடிய உடனடி அபாயங்கள் தொடர்பில், உருப் படியான தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.

சி.ஐ.ஏ. விசாரணை முறைகளின்படி, தீவிரவாத சந்தேக நபர்கள் 180 மணிநேரம் தொடர்ந்து விழித்திருக்கும்படி நிர்ப்பந்திக் கப்பட்டனர். கைதிகள் அவமானப்படுத் தப்பட்டனர், அடிக்கப்பட்டனர். வலிதரக்கூடிய வகையில் உட்காரும்படி பணிக்கப்பட்டனர். இந்த திட்டத்தை சி.ஐ.ஏ. முறையாக செயல்படுத்தவில்லை என்றும் இது தொடர்பாக மக்களுக்கு அது தவறான விபரங்களைத் தந்ததாகவும் செனட் உறுப்பினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சி.ஐ.ஏ. சித்திரவதைகள்

பலஸ்தீன பு+ர்வீகம் கொண்ட சவு+தி நாட்டவரான 43 வயது அபு+ சுபைதாஹ் தற்போது குவன்தனாமோ பே சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இவர் 2002 ஆம் ஆண்டு சூட்டுக் காயத்துடன் பாகிஸ்தானில் வைத்து கைது செய்யப் பட்டுள்ளார். "47 நாட்கள் தனிமைப் படுத்தப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருக்கும் சுபைதாஹ் 2002 ஓகஸ்ட் மாதம் 20 நாட்கள் கொ^ரமான முறையில் புலன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இதன்போது கைதியின் முகத்தை துணியால் மறைத்து அதன் மீது தண்ணீரை ஊற்றி சித்திரவதை செய்யும் வோட்டர் போடிங் முறையை சுபைதாஹ் மீது நாளாந்தம் இரண்டு முதல் நான்கு தடவைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது" என்று செனட் சபை அறிக்கை குறிப்பிட்டுள்ளது. இந்த காலப்பிரிவில் சுபைதாஹ் 266 மணி நேரம் சவப்பெட்டி ஒன்றுக்குள் அடைத்து வைக்கப்பட்;டிருந்துள்ளார். சுபைதாஹ் மீதான முதல் நாள் புலன் விசாரணையில் அவர், சங்கிலியால் பிணைக்கப்பட்டு, நிர்வாணமாக்கப்பட்டு, சுவரில் மோதவிடப்பட்டுள்ளார்.

"சுபைதாஹ் மேலதிக தகவல்களை கொடுக்க மறுக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத் தின்போதும் அவரது முகத்தில் அறை யப்பட்டோ அல்லது முகத்தை நெருக்கியோ கொடுமைப் படுத்தப்பட்டிருக்கிறார்" என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. யெமன் நாட்டவரான 42 வயது ரம்ஸி பினல்'Pப் செப்டெம்பர் 11 தாக்குதலுக்கு அடுத்த தினம் பாகிஸ்தானில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். குவன்தனாமோ பே சிறையில் இருக்கும் அவர் மீதான வழக்கு விசாரணை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டது. சி.ஐ.ஏ.

தலைமையகத்தில் இடம்பெற்ற ஆரம்ப கட்ட விசாரணைகளுக்கு பினல்'Pப் ஒத்துழைப்பு வழங்கி இருப்பதாகவும் அவர் மோசமான விசாரணை முறைக்கு முகம் கொடுக் கவில்லை என்றும் செனட் அறிக்கை குறிப்பிட்டுள்ளது. எனினும் 2003இல் சுமார் மூன்று தினங்கள் அவர் தூங்க விடாமல் தடுக்கப்பட்டிருப்பதோடு, நிர்வாணமாக்கப் பட்டு வைக்கப்பட்டுள்ளார். செப்டெம்பர் 11 தாக்குதலின் மூளையாக செயற்பட்டவர் என சந்தேகிக்கப்படும் 49 அல்லது 50 வயதான காலித் n'ய்க் முஹமது 2003 ஆம் ஆண்டில் பாகிஸ்தா னில் வைத்து பிடிபட்டார்.

குவன்தனாமோ பே சிறையில் இருக்கும் இவர் மீதான குற் றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் மரண தண்ட னைக்கு முகம் கொடுக்க வேண்டி வரும். செனட் அறிக்கையில் கே.எஸ்.எம். என அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் இவர் மீதான புலன் விசாரணையின்போது, முகம் மற்றும் வயிற்று பகுதிகளில் கடுமையாக தாக்கப்பட்டிருப்பதோடு முகத்தை நெருக்கி சித்திரவதைக்கு உள்ளாகியுள்ளார். இவர் தனது கைகளை உயர்த்தி வைத்தபடி தூக்கமின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளார். அதேபோன்று நிர்வாணமாக்கப்பட்டும், தண்ணீரில் ஊறவைக்கப்பட்டுமுள்ளார்.

இதன்போது மல வழி நீரேற்றப்பட்டு வாக்கு மூலம் பெறப்பட்டபோது இருவர் பற்றி போலியான தகவல் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய குறித்த இருவரையும் சி.ஐ.ஏ. கைதுசெய்து விசாரித்தபோது அவர்கள் நிரபராதிகள் என்று கண்டறியப் பட்டுள்ளது. 2003 மார்ச் மாதத்தில் முஹமத் இரண்டு வாரங்களுக்கு 15 தடவைகள் வோட்டர் போடிங் முறையில் சித்திரவதை செய்யப்பட்டிருக்கிறார். அதேபோன்று அவர் ஏழரை நாட்கள் தூக்கமின்றி நிறுத்தி வைக் கப்பட்டுள்ளார். சி.ஐ.ஏ கையாண்ட மூர்க்க மான விசாரணை முறைகளை அனுமதித்த அமெரிக்க அதிகாரிகள் மீது வழக்கு தொடுக் கப்படவேண்டும் என்று ஐ.நா. மன்றமும், மனித உரிமைக் குழுக்களும் கோரியுள்ளன.

செனட் அறிக்கையில் விபரிக்கப்பட்டிருக் கும், சந்தேக நபர்களை தூங்க விடாதது, அவர்களைத் தண்ணீரில் மூழ்கடித்து மூச்சுத் திணறவைத்து நடத்தும் சித்திரவதை போன்ற விசாரணை முறைகள் புஷ் நிர்வாகத்தின் மிக உயர் மட்டங்களால் திட்டமிட்டு அமுல்படுத்தப்பட்ட கொள்கை முடிவுகள் மனித உரிமைச் சட்டங்கள் மோசமாக மீறப்படுவதற்கு வழிவகுத்தன என்று மூத்த ஐ.நா. விசாரணையாளர் பென் எம்மர்சன் கூறினார். ஆனால் இந்த அறிக்கையில் தனி நபர்களுக்கு எதிராக குற்ற வழக்குகளைப் பதிய போதிய ஆதாரம் தரப்படவில்லை என்று அமெரிக்க நீதித்துறை கூறியுள்ளது.

சி.ஐ.ஏவின் இயக்குநர் ஜோன் ப்ரென்னன், இந்த கடுமையான நடவடிக்கைகளை தனது நிறுவனம் மேற்கொண்டதை நியாயப்படுத்தி யிருக்கிறார். இதே கருத்தை அமெரிக்க செனட்டில் குடியரசுக்கட்சியினரும் எதிரொ லித்திருக்கிறார்கள். பராக் ஒபாமா 2009 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக பொறுப்பேற்றதை அடுத்து சி.ஐ.ஏ. வின் புலன்விசாரணை முறையை நிறுத்தினார். அல் கொய்தா கைதிகள் கொ^ரமான முறையில் சித்திரவதைக்கு உள்ளாவதை தெரிந்தே அவர் அந்த நடவடிக்கையை நிறுத்தினார். முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்ய+ புஷ் காலத்தில் அல் கொய்தாவுக்கு எதிரான சி.ஐ.ஏ. நடவடிக்கையில் பல சந்தேக நபர்களும் கடத்தப்பட்டும், தடுத்து வைக்கப் பட்டும் மற்றும் புலன் விசாரணைக்கு உள்ளாக்கப் பட்டு இருக்கின்றனர். இவ்வாறான 100க்கும் அதிகமான சந்தேக நபர்கள் அமெரிக்காவுக்கு வெளியில் இரகசியமான இடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
Share it:

Post A Comment:

0 comments: