மைத்திரிக்கும், ரணிலுக்கும் வழங்கப்பட்ட 10 ரூபா பெறுமதியான 'பேனா'

Share it:
ad
ஊடக சுதந்திரத்திற்கான செயற்பாட்டுக் குழு பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசியல் தலைவர்களிடம் 10 ரூபா பெறுமதியான பேனாவை வழங்கி ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரியுள்ளது. 

ஊடக சுதந்திரத்திற்கான செயற்பாட்டுக் குழுவினால் இன்று (10.12.14) தர்ம விஜய நிதிய அரங்கில் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததோடு அதில் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். 

மைத்திரிபால சிறிசேன, பத்தரமுல்லே சீலரத்ன தேரர், சிறிதுங்க ஜயசூரிய, சரத் மனமேந்திர ஆகிய வேட்பாளர்கள் இதில் கலந்து கொண்டதுடன் ஊடகவியலாளர்கள் சார்பான கோரிக்கை அடங்கிய மகஜர் இவர்களிடம் கையளிக்கப்பட்டது. 

உயிர்நீத்த ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட பின் அரசியல்வாதிகள் கையில் ஒரு பேனை வழங்கப்பட்டு ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்க என கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 

இங்கு உரையாற்றிய பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தன்னால் ஊடகவியலாளர்களுக்கு ஏதெனும் இடையூறு ஏற்பட்டதா என கேள்வி எழுப்பினார். 

தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஊடகவியலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணும் திட்டம் உள்ளடக்கப்படும் என அவர் உறுதி அளித்தார். 

ஜனவரி 8ம் திகதிக்குப் பின் ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் சட்டமூலம் ஒன்றை பாராளுமன்றில் கொண்டுவரவுள்ளதாக அவர் கூறினார். 

இங்கு உரையாற்றிய எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, 100 நாட்களுக்குள் தகவல் பெறும் உரிமை சட்டத்தை நிறைவேற்றவுள்ளதாகத் தெரிவித்தார்.
Share it:

Post A Comment:

0 comments: