முஸ்லிம்கள் மைத்திரிபாலவுக்கு ஆதரவளிப்பதால் ஒருபோதும் இனக்கலவரம் ஏற்படாது - ஆசாத் சாலி

Share it:
ad
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு முஸ்லிம்கள்  ஆதரவளிப்பதால் 1915 ஆம் ஆண்டு ஏற்பட்டதைப் போன்று எத்தகைய இனக்கலவரமும் ஏற்பட்டுவிடாது, இதுகுறித்து முஸ்லிம்கள் எவரும் அச்சப்படத் தேவையில்லையென ஆசாத் சாலி குறிப்பிட்டார்.

இதுகுறித்து அவர் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு கூறுகையில், 

மஹிந்த ராஜபக்ஸவும், பொதுபல சேனாவும் குழம்பிப் போயுள்ளனர். முஸ்லிம்கள் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டுமென தீர்மானித்துவிட்ட நிலையில், அவர்கள் முஸ்லிம்கள் மீது ஆத்திரம் கொண்டுள்ளனர்.

இதனால்தான் சிங்கள் - முஸ்லிம் கலவரம் என கதை விடுகிறார்கள். அதற்கான வாய்ப்புகள் இல்லை. மைத்திரிபால ஜனாதிபதியானால் அதற்கான எத்தகைய வாய்ப்புகளும் இல்லை. இதனை உறுதிபட கூறுகிறேன் என்றார்.

Share it:

Post A Comment:

0 comments: