முஸ்லிம்களுக்கு அநியாயங்கள் நடந்த வண்ணமுள்ளன - உனைஸ் பாரூக்

Share it:
ad
(JM.Hafeez)

சிறுபான்மை கட்சித் தலைமைகள் யாரை ஆதரித்தாலும் பொது மக்கள் எதிரணியின் பொது வேட்பாளரையே ஆதரிப்பது என்பதை ஏற்கனவே முடிவு செய்து விட்டனர் என்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உனைஸ் பாரூக் தெரிவித்தார். 

அக்குறணை அரபா வரவேற்பு மண்டபத்தில் (2014 12 05 ம் திகதி) வெள்ளிக்கிழமை  மாலை இடம் பெற்ற பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேனவுக்கு ஆதரவு தெரிவிக்கும் பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

கண்டி மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.ஏ.ஹலீம் ஏற்பாடு செய்திருந்த இக் கூட்டத்தில் மேலும் உரையாற்றிய வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உணைஸ் பாரூக் இவ்வாரும் தெரிவித்தார்.

கடந்த மூன்று தசாப்தங்களாக முஸ்லிம்களாகிய எங்களுக்கு பல சவால்கள் ஏற்பட்டன. வட பகுதியில் இருபது வருடங்கள் பள்ளிவாயல்களில் தொழுகையை நடாத்த முடியவில்லை. காத்தான்குடியில் தொழுது கொண்டிருந்த முஸ்லிம்களை பரிதாபமாக சுட்டு கொண்டார்கள் . அப்போதும் முஸ்லிம்பகளாகிய நாங்கள் இறைவனிடம் பொறுப்பை ஒப்படைத்து பொறுமையாக இருந்தோம். எவராலும் அழிக்க முடியாது என்று கூறப்பட்ட புலிகள் அழிந்தனர். அதே போல் அண்மை காலங்களில் முஸ்லிம்களுக்கு பல்வேறு அநியாயங்கள் நடந்த வண்ணம் உள்ளன. பள்ளிவாசல்களுக்குள் தடைசெய்யப்பட்ட மிருகங்களின் இறைச்சியை கொண்டு வந்து போட்டனர். இதற்கும் முஸ்லிம்கள் பொறுமையுடன் இறைவனிடத்தில் ஒப்படைத்துள்ளனர். முஸ்லிம்களுக்கு அநியாயம் செய்தவர்கள் காலப் போக்கில் பொறுமையின் கூலியாக அழித்த வரலாரே இருக்கின்றன.

பேருவலை அலுத்கமை பகுதிகளில் அண்மையில் இடம் பெற்ற வன் செயல்களின் போது அரசும் ஆயுதம் ஏந்தியவர்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அன்று விடுதலை புலிகளின் ஆதிக்கம் முஸ்லிம் கிராமங்களில் இருந்த போது அப்போதைய ஐ.தே.க. அரசிடம் நாங்கள் தற்பாதுகாப்புக்காக ஆயுதம் கேட்டோம் அப்போதைய அரசு எமக்கு ஆயுதமும் தந்து பயிற்சியையும் தந்தது. அதனால் புலிகளின் தொல்லை நீங்கியது. அவர்களுடன் எங்களுக்கு ஒரு இணக்கப்பாட்டிக்கு வர முடிந்தது. பேருவலையில் முஸ்லிம்களுக்கு எதிரான பயங்கரவாத செயல்கள் இடம் பெற்ற போதும்  தற்பாதுகாப்புக்கான ஆயுதம் கேட்கப்பட்டது. ஆனாலும் அவை வழங்கப்பட வில்லை.

முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் கட்டாயமாக பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேனவை ஆதரிக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் கட்சிகள் யாரை ஆதரித்தாலும் தமிழ் முஸ்லிம் மக்கள் அனைவரும் எதிர்கட்சியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேனவை ஆதரிப்பதென தீர்மானித்து விட்டார்கள். இன் நிலையில் கட்;சிகள் மக்களின் உணர்வுகளை புரிந்து  கொள்ள வேண்டும் என்றும் அவர் இங்கு தெரிவித்தார்.

கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.ஏ.ஹலீம் உற்பட பலரும் இங்கு உரையாற்றினர்.

Share it:

Post A Comment:

0 comments: