சரத் பொன்சேகா இரவு விழுந்த குழியில், மைத்திரிபால பகலில் விழுந்து விட்டார் - விமல் வீரவன்ச

Share it:
ad
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இரவு விழுந்த குழியில் மைத்திரிபால சிறிசேன பகல் விழுந்து விட்டதாக அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.

ஹங்வெல்லையில் இன்று நடைபெற்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

சரத் பொன்சேகாவுக்கு அரசியல் என்பது என்னவென்று தெரியாது. அவருக்கு இராணுவ நிர்வாகம் பற்றியே தெரியும்.

ஆனால் மைத்திரிபால அரசியல் குருடன். அவர் இரவில் விழுந்த குழியில் இவர் பகலில் விழுந்து விட்டார்.

பொன்சேகாவைவிட மைத்திரிபால சிறிசேன முட்டாள். இவரும் முட்டாள்தான், ஆனால் மைத்திரிபால மிகப் பெரிய முட்டாள்.

2010 ஆம் ஆண்டு ஹக்கீமும் சம்பந்தனும் எங்கு இருந்தனர். அவர்கள் நல்லாட்சியையும் ஜனநாயகத்தையும் கொண்டு வருவதற்காகவே அந்த அணியில் இருந்தனர்? எனவும் விமல் வீரவன்ஸ குறிப்பிட்டுள்ளார்.
Share it:

Post A Comment:

0 comments: