இந்த தேர்தல் ஜனநாயகத்தையும், நல்லாட்சியையும் மீள எற்படுத்த அற்புதமான வாய்ப்பு - கல்விமான்கள் குழு

Share it:
ad
-Gtn-

இலங்கை தனது வரலாற்றில் முக்கியமான தருணத்தில் உள்ளதாக தெரிவித்துள்ள கல்விமான்கள் குழுவொன்று இந்த தேர்தலில் எடுக்கப்படும் முடிவுகள் எதிர்கால சந்ததியினரின் வாழ்வில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலிற்கு பின்னரும் உத்தேச அரசமைப்பு மாற்றங்கள் மற்றும் கொள்கை சீர்திருத்தங்கள் குறித்து குரல் கொடுக்க போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நாங்கள் விரும்பும் மாற்றங்களை ஒரேஇரவிலோ அல்லது ஆட்சிமாற்றத்தின் மூலமோ மாத்திரம் ஏற்படுத்த முடியும் என நாங்கள் கருதவில்லை,அதேவேளை இந்த தேர்தல் ஜனநாயகத்தையும்,சட்டத்தின் ஆட்சி மற்றும் நல்லாட்சியையும் மீள எற்படுத்த அற்புதமான வாய்ப்பொன்றை வழங்குகின்றது,

கடந்த தசாப்தத்தில் நாடு சட்டத்தின் ஆட்சியும், ஜனநாயகத்தின் அனைத்த மரபுகளும்,  நல்லாட்சியும் வீழ்ச்சியடைந்துள்ளதை அனுபவித்துள்ளது. அரசியல் மற்றும் பொருளாதார அதிகாரம் ஒருசிலரின் கரங்களுக்கு சென்றுள்ளது.என கல்விமான்களின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
Share it:

Post A Comment:

0 comments: