பிலிப்பைன்சை தாக்கிய 'ஹகுபிட்'

Share it:
ad
பிலிப்பைன்சை ‘ஹகுபிட்’  புயல் தாக்கியது. புயலோடு மழையும் பெய்து கொண்டிருக்கிறது. கடந்த 13 மாதங்களுக்கு முன் உருவான சூப்பர் புயலால் ஏற்பட்ட பாதிப்பு மீண்டும் ஏற்படுமோ? என்று மக்கள் பயந்துகொண்டிருக்கிறார்கள்.

புயல் தாக்கும்போது மத்திய பிலிப்பைன்ஸ் தீவான சமர், லெய்டே மாகாணம், தக்லோபன் நகரத்தில் மின்சாரம் தடைபட்டது.

பலமான காற்று சுழற்றி அடிக்கிறது என்றும், தண்ணீர் அளவு உயர்ந்துள்ளது என்றும் கிழக்கு சமரில் உள்ள கடற்கரை நகரமான சுலாட்டின் அதிகாரி மாபெல் எவார்டன் தெரிவித்தார்.

தற்போது 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசி வருகிறது. நகரத்தை நெருங்கி கொண்டிருக்கும் ஹகுபிட் தரையை தாக்கும்போது அதிக அளவில் காற்று வீசும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

175 கி.மீ வேகத்தில வீசிய காற்றுடன் வீசிய புயல் வடமேற்கு திசையை நோக்கி மணிக்கு சுமார் 16 கி.மீ. வேகத்தில் நகர்ந்து கொண்டுள்ளது என்று அந்நாடடின் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே ஹகுபிட் புயல் சனிக்கிழமை (இன்று) தாக்கும் என்று உச்சகட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அந்த பகுதியில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இதுபோன்ற அதிக அளவு மக்கள் ஒரு புயலுக்காக வெளியேற்றப்படுவது இதுவே முதல் முறை என்று ஐக்கிய நாடுகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
"இந்த செய்தி / 
Share it:

Post A Comment:

0 comments: