யாழ்ப்பாணம் ஐந்து சந்தியில் மோதல் - இருவர் காயம், பீடா கடை அடித்து நொறுக்கம் (படங்கள்)

Share it:
ad
யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் நடைபெற்ற மோதலில் இருவர் காயமடைந்ததுடன்  கடை,மோட்டார் சைக்கிள் அடித்து நொறுக்கப்பட்டு எரிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை 6.40 மணியளவில் குறித்த சந்தியில் இருந்த நபர் ஒருவரை 8 பேர் கொண்ட குழுவினர் வாள் மற்றும் தடி போன்ற ஆயுதங்களால் தாக்க முற்பட்ட போது இம்மோதல் நிகழ்ந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதன் போது தாக்க வந்த குழுவினர் இருவரை வாளால் வெட்டி காயப்படுத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர். இதனால் ஆத்திரமுற்ற அப்பகுதி மக்கள் அங்குள்ள பீடா,பாக்கு விற்கும் கடை ஒன்றை அடித்து நொறுக்கியதுடன் கடையின் முன்னால் நின்ற மோட்டார் சைக்கிள்,சைக்கிள்களை அடித்து நொறுக்கி தீயிட்டனர்.

 மோதலில் சம்பந்தப்பட்ட குழு நேற்று இரவு குறித்த பீடா கடையில் நின்று கொண்டு அப்பகுதி இளைஞர்களுடன் சண்டை பிடித்து சென்றுள்ளது.  பின்னர்  அக்குழு தங்களை  நேற்றைய தினம் தாக்கியவர்களை தாக்க இன்று முற்பட்டபோதே இம்மோதல் இடம்பெற்றுள்ளது.

எனினும் அங்கிருந்த மக்கள் இப்பிரச்சினைக்கு முக்கிய காரணம் அடித்து உடைக்கப்பட்ட பீடா கடை ஆகும் என தெரிவித்ததுடன். இங்கு வாடிக்கையாளர்களாக வருபவர்கள் எங்கள் பெண்பிள்ளைகள்,பாடசாலை மாணவர்களை சீரழிக்கின்றனர்என குறிப்பிட்டனர். .இதற்கு எதிராக பொலிசாரிடம் முறையிட்டு  வழக்கு போடப்பட்டு கடை உரிமையாளருக்கு ஆதரவாக தற்போது செல்கின்றது. இதனால் தான் அடித்து நொறுக்கினோம் என்றனர்.

அடித்து நொறுக்கப்பட்டுள்ள குறித்த கடை முறையான அனுமதியுடன் இயங்கி வருவதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

தற்போது  பதற்ற நிலையை அடைந்துள்ள அவ்விடத்திற்கு பொலிஸார் இராணுவத்தினர் பாதுகாப்பினை பலப்படுத்தியுள்ளனர். மேலும் அவ்விடத்திற்கு யாழ் மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் பிரசாத் ரணசிங்க மற்றும் யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்டோர் வருகைதந்து பொதுமக்களுடன் கலந்துரையாடிக்கொண்டிருக்கின்றனர்.

அடித்து நொறுக்கப்பட்ட குறித்த பல்பொருள் வாணிபம் எனும் பீடா கடை முஸ்லீம் நபர் ஒருவருக்கு சொந்தமானது என மேலும் தெரிவிக்ப்படுகிறது.








Share it:

Post A Comment:

0 comments: