வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக, உதவி வேண்டுகின்றது ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்

Share it:
ad
 தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக நாடு முழுவதும் பாரிய வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இலங்கையின் வடமத்திய மாகாணம் – பொலன்னறுவை, அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களும், மன்னாரை அண்டிய சில பகுதிகளும், கிழக்கின் பல பகுதிகளும் வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

வெள்ளத்தினால் இதுவரை சுமார் 07 இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு, முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். சிறுவர்கள், குழந்தைகள் மருத்துவ உதவியின்றி மிகவும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இந்நிலையில் அவர்களுக்காக உதவி செய்து அவர்களின் உயிர்களை காக்க வேண்டிய பொருப்பு நம் அனைவருக்கும் உள்ளது.

ஜாதி, மத, இன, மொழி வேறுபாடுகளின்றி அனைவரும் இப்பணியில் ஒன்றிணைய வேண்டிய நேரமிது.

கடந்த காலங்களில் இது போன்ற வெள்ள அனர்த்தங்கள் ஏற்பட்ட நேரத்தில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக உணவுப் பொருட்கள், உடை வசதிகள், மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டன. அந்த வகையில் இம்முறையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக உங்களால் முடிந்த உதவிகளை வாரி வழங்குமாறு அன்பாய் வேண்டிக் கொள்கின்றோம்.

தமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம். அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான் நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பன் மடங்காகக் கொடுக்கிறான். அல்லாஹ் தாராளமானவன் அறிந்தவன்.

(அல்குர்ஆன் 2 : 261)

ஆதமுடைய மகனே நீ (கொடு) செலவிடு! உனக்கு நான் செலவிடுகிறேன் (கொடுக்கிறேன்)  என்று அல்லாஹ் சொல்வதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி),நூல்: புகாரீ (5352)

வசதி படைத்தவர்களாகிய நாம் வசதியற்றவர்களுக்கு எந்த வகையில் உதவினாலும் அதன் மூலம் முழுமையான பலனை இம்மையிலும் மறுமையிலும் அனுபவிப்போம்.

நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அது உங்களுக்கே. அல்லாஹ்வின் திருப்தியைப் பெறவே செலவிடுகிறீர்கள். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் உங்களுக்கே அது முழுமையாக வழங்கப்படும். நீங்கள் அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள்.

(அல்குர்ஆன் 2 : 272)

நாம் வழங்கும் தர்மம் மறுமையில் அல்லாஹ்வால் பல மடங்கு உயர்த்தப்பட்டு மிகப் பெரிய கூலியாக வழங்கப்படும். ஆகவே இப்பணியில் உங்களையும் இணைத்துக் கொண்டு மறுமையில் வெற்றியடையுங்கள்.


வெள்ளத்தினால் பாதிக்கப் பட்டவர்களுக்கான உங்கள் உதவிகளை அனுப்ப வேண்டிய வங்கிக் கணக்கு

SRILANKA THAWHEED JAMATH,

HATTON NATIONAL BANK

MARADANA BRANCH

A/C NO : 108010105916

Cont : 011 2677974, 0774781477


Share it:

Post A Comment:

0 comments: