(மு.இ.உமர் அலி)
நிந்தவூர் APC வீதியும் மத்தியவடிகானும் சந்திக்குமிடத்தில் வடிகான் வேலை நீண்டகாலமாக பூர்த்திசெய்யப்படாமல் இருப்பதனால் வெள்ளநீர் வடிந்தோடுவதற்காக கொங்கிரீட் வீதியின் குறுக்காக சுமார் ஒரு மீற்றர் அகலமான வெட்டு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வெள்ளநீர் வடிந்தோடுவதற்காக வெட்டப்பட்டுள்ள இந்த தற்காலிக ஓடை காரணமாக , இந்த வீதியால் உந்துருளிகள்,ஈருருளிகள் தவிர்ந்த வேறு எந்த வாகனங்களும் போக்குவரத்துச்செய்வதற்கு உகந்ததாக இல்லாத நிலையை அவதானிக்க முடிகின்றது..
இவ்வீதியிலேயே நிந்தவூர் தௌஹீது ஜும்மா பள்ளிவாசல்,,கமு/அறபா வித்தியாலயம், நீர்வளங்கல் சபையின் நிந்தவூர் பிரதேச காரியாலயம், உபதபாலகம்,கோயில் போன்ற பொது நிறுவனங்கள் அமைந்துள்ளன.இந்நிறுவனங்களுக்கு செல்லும் பொதுமக்கள் உட்பட பாடசாலை செல்லும் மாணவர்களும், விவசாயிகளும்,ஏனைய பொதுமக்களும் இவ்வீதியினைப்பயன்படுத்துவதில் மிகுந்த .சிரமத்தை எதிர்நோக்குகின்றனர், ஒவ்வோர் ஆண்டும் மாரிகாலத்தின்போது இந்த தற்காலிக வெட்டு ஏற்படுத்தப்பட்டு.மாறரி காலம் முடிந்த பின்னர் மூடப்படுவது வழமையாக நடந்து வருகின்றது .
குறித்த அதிகாரிகளும்,அரசியல்வாதிகளும் இவ்விடயம்பற்றி சற்று கவனமெடுத்தால் இதற்குரிய நிரந்தர தீர்வு ஒன்று கிடைக்க வாய்ப்பு உண்டு. எனவே இதற்குரிய அதிகாரிகள் இந்தப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வினை மிக விரைவில் ஏற்படுத்தித் தருமாறு பொதுமக்கள் மிகவும் வினையமாக கேட்டுக்கொள்கின்றனர்.




Post A Comment:
0 comments: