வாக்குகளை திரட்டுவதற்காக பிக்குகளுக்கு, 80 இலட்ச பெறுமதியான வாகன அனுமதிப்பத்திரம்

Share it:
ad
பௌத்த பிக்குககளின் ஆதரவினை திரட்டும் நோக்கில் அரசாங்கம், வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரங்களை வழங்கியுள்ளதாக தேசிய சங்க சம்மேளனம் குற்றம் சுமத்தியுள்ளது.

தேசிய சங்க சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் பாயின்கல ஆனந்த சாகர தேரர், சிங்கள பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலின் போது இந்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

மிதவாத கொள்கைகளை பின்பற்றி வரும் 70 பௌத்த பிக்குகளுக்கு அரசாங்கம் கடந்த மூன்று மாத காலப்பகுதியில் வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரங்களை வழங்கியுள்ளது.

60 முதல் 80 லட்ச ரூபா பெறுமதியான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு இந்த வாகன அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

பௌத்த பிக்குகளின் தேசிய ரீதியான கொள்கைகளை சிறைப்படுத்தும் நோக்கில் இவ்வாறு வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த பத்தாண்டு காலப்பகுதியில் குறிப்பிடத்தக்களது. பௌத்த பிக்குகளுக்கு இவ்வாறு வாகன அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொண்ட பௌத்த பிக்குகளின் விபரங்கள் அம்பலப்படுத்தப்படும்.

அரசியல்வாதிகளினால் வழங்கப்பட்டு வரும் சலுகைகள், வரப்பிரசாதங்கள் போன்றவற்றுக்கு விலை போகாது முக்கிய விடயங்களில் பௌத்த பிக்குகள் தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டுமென தேசிய சங்க சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் பாயின்கல ஆனந்த சாகர தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Share it:

Post A Comment:

0 comments: