22 மாவட்டங்களில் எனது வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது - மைத்திரிபால

Share it:
ad

இலங்கையில் உள்ள 25 மாவட்டங்களில் 22 இல் தமது வெற்றி உறுதிப்படுத்தப்படும் என பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வலப்பனையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

நான் உங்களை சந்திக்க வந்த தருணத்தில் பல கட்சிகளைச் சார்ந்த பிரமுகர்கள் இங்கு இருகிறார்கள். நான் ஏற்கனவே நாட்டில் 3 இல் 2 பாகத்திற்கு பயணம் செய்துள்ளேன். எனவே நான் 22 மாவட்டங்களில் வெற்றி பெறுவது உறுதி செய்யப்பட்டள்ளது.

Share it:

Post A Comment:

0 comments: