மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காணரமாக கல்குடாத் தொகுதியில் கோறளைப்பற்று மற்றும் ஓட்டமாவடி ஆகிய இரண்டு பிரதேச செயலாளர் பிரிவுகளில் ஒன்பது இடைத்தங்கள் முகாம்களில் அறுநூற்றி நாற்பத்தி மூன்று குடும்பங்களைச் சேர்ந்த இரண்டாயிரத்தி பதினெட்டு (2018) பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக குறித்த பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள் தெரிவித்தனர்.
இதன் அடிப்படையில் கோறளைப்பற்று பிரதேச செயாளர் பிரிவில் ஐந்து இடைத்தங்கள் முகாம்களில் இநூற்றி முப்பத்தைந்து (235) குடும்பங்களைச் சேர்ந்த எழுநூற்றி என்பத்தி ஆறு (786) போர் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன் வெள்ளத்தினால் மொத்தமாக ஆராயிரத்தி எழுநூற்றி முப்பத்திமூன்று (6733) குடும்பங்களைச் சேர்ந்த இருபத்திரெண்டாயிரத்தி எழுநூற்றி என்பத்தி மூன்று (22783) பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ரீ.தினேஸ் தெரிவித்தார்.
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் நான்கு முகாம்களில் முன்நூற்றி எட்டு (308) குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்தி நூற்றி முப்பத்திரெண்டு (1132) பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ளத்தினால் ஏழாயிரத்தி இருநூற்றி தொன்நூற்றி எட்டு (7298) குடும்பங்களைச் சேர்ந்த இருபத்தாராயிரத்தி நாநூற்றி எழுபத்தாறு (26476) பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் தெரிவித்தார்.
இதே வேளை காவத்தமுனை பிரதேசத்தின் ஊடாக வாகனேரி மூக்கர்ரகல், ஜப்பார்ரதிடல் போன்ற வயல் பிரதேசங்களுக்கு செல்லும் பிரதான வீதி நீரில் மூழ்கியுள்ளது.
Post A Comment:
0 comments: