முஸ்லீம் மகளிர் கல்லூரி அதிபரின் கவலை..!

Share it:
ad
(அஷ்ரப் ஏ சமத்)

பம்பலப்பிட்டி முஸ்லீம் மகளிர் கல்லூரியின் வருடாந்த பரசலிப்பு வைபவம் கல்லூரியின் ஹாஜாரா மண்டபத்தில்  அதிபர் கலாநிதி ஹஜர்ஜான் மன்சுர் தலைமையில் நடைபெற்றது.

இவ் நிகழ்வுக்கு ஜனாதிபதியின் பாரியார் சிரந்தி விக்கிரமசிங்க ராஜபக்ச பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சகல பாடங்களிலும் ;திறமை காட்டிய மாணவிகளுகளுக்கு பரிசில்களை வழங்கி வைத்தார் . கொழும்பு மாவட்ட கல்விப் பணிப்பளார் ஜயந்த விக்கிரமநாயக்க வலயக் கல்விப் பணிப்பாளர் ஆசிரியைகள் பெற்றார் சங்க உறுப்பிணர்கள் பழைய மாணவிகள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.

இங்கு தினகரன் வாரமஞ்சரியின் இணை ஆசிரியர் சுகைப் எம் காசீமின்   மகள்  இசாப் ஹஸ்னா சுகைப் 6ஆம் ஆண்டு சிங்களமொழி முலம்  7 பாடங்களிளும் அதி விசேட சித்தி, கடந்த ஆண்டு புலமைப்பரிசிலில் 167 புள்ளிகள் பெற்றமைக்காக  சிறந்திவிக்கிரசிங்கவினால் விருது வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இங்கு உரையாற்றி அதிபர் ஹர்ஜான் 

இக் கல்லூரியில் அடுத்த வருடம் முதலாம் தரத்திற்காக் 1500  முஸ்லீம் மாணவிகளின் பெற்றார்கள்  அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தனர். அதில் 245 மாணவிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கமுடிந்துள்ளது. ஏனைய 1275 மாணவிகளது கல்வி நிலை என்ன? இவ் மாணவிகள் சர்வதேச பாடாசலை நோக்கிச் சென்றார்களா ?  

மேல் மாகாணத்தில் முஸ்லீம் பெண்களுக்கென உள்ளதொரு ஒரே ஒரு தேசிய பாடாசலை முஸ்லீம் மகளிர் கல்லூரியாகும்.    கொழும்பில் உள்ள பெற்றார்கள் கலையில்  5 மணிக்கே வேனில் அடைத்து பிள்ளைகளை கல்லூரிக்கு அனுப்புகின்றனர். இங்கு வகுப்பறையில் அடைத்து நாங்கள் வைத்திருக்கின்றோம். மீண்டும் வேணில் அடைத்துக் கொணடு வீடுகள் செல்கின்றார்கள். வீடுகளிலும் இப் பிள்ளைகள் வீடுகளுக்குள்ளேயே அடைந்து கிடக்கின்றனர்.  இந்த மாணவிகள் சுதந்திரமாக ஓடி விளையாட இந்தக் கல்லூரியில்  ஒரு விளையாட்டு மைதாணம்  இல்லை. இந்த மண்டபத்தில் 300 பேரையே அடக்க முடியும் ஏனைய 3000 மாணிவிகளும் இந் நிகழ்வில் கலந்து கொள்ள முடியாமையினால் அவர்களை வீடுகளுக்கு அனுப்பியுள்ளோம்.  ஆகவே சோனக சங்கத்தின் தலைவர் பேராசிரியர் தணிப்பட்ட நிதியில் நன்கொடையாக வழங்கிய  நிதியில்  8 மாடிகளை க் கொண்ட  வகுப்பரை ஒன்றை நிர்மாணித்துக் கொண்டிருக்கின்றார். அத்தோடு இந்த மண்டபத்தை நிர்மாணிக்கவும் அவர்கள் உத்தேசித்துள்ளார். என கல்லூரி அதிபர் தெரிவித்தார். 




Share it:

Post A Comment:

0 comments: