மல்வானை அல் முபாரக் தேசிய பாடசாலை மாணவர்களுக்கென ஊடகத்துறை கருத்தரங்கு

Share it:
ad

 (ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)

மல்வானை அல் முபாரக் தேசிய பாடசாலை மாணவர்களுக்கென ஊடகத்துறை சம்பந்தமான கருத்தரங்கு இன்று சனிக்கிழமை(08) அரசாங்க தகவல் திணைக்களப் பிரதிப் பணிப்பாளர் ஹில்மி மொஹம்மட் தலைமையில் பாடசாலையில் நடைபெற்றது.

'மாணவர்களும் ஊடகத்துறையும்' எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற கருத்தரங்கில் பாடசாலையின் பத்தாம் ஆண்டு மற்றும் பதினொராம் ஆண்டு மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இக்கருத்தரங்கை மல்வானை அல் முபாறக் தேசிய பாடசாலை அபிவிருத்தி சங்கமும் மலர் இணைய வானொலியும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிகழ்வில் சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பின் பணிப்பாளர் புரவலர் ஹாசிம் உமர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். அவர் கருத்தரங்கில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கான சான்றிதழ்களை வழங்கினார்.

பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர் டொக்டர் அப்துல் பத்தாஹ், பாடசாலை ஆசிரியரும் பகுதிப் பொறுப்பாசிரியருமான திருமதி றுவைலா நூருல் அமீன், மலர் இணைய வானொலி ஆசிரியர் ஏ.எல்.எம்.அஸ்வர், நவமணி பத்திரிகையின் பத்திரிகையாளர் எம் ஹம்சா, இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன அறிவிப்பாளர் ஏ.எச்.எம்.பௌசான் ஆகியோர்களும் கலந்து கொண்டனர்.


Share it:

Post A Comment:

0 comments: