நரேந்திர மோடி உண்மையான மனிதர் - இம்ரான் கான்

Share it:
ad
வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கியுள்ள இந்தியர்களின் கறுப்பு பணத்தை வெளிக்கொண்டு வருவேன் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தேர்தலின்போது கூறினார். அதை தற்போது நிறைவேற்றி வருகிறார். அவர் உண்மையான மனிதர் என்று பாகிஸ்தானின் எதிர்க்கட்சி தலைவர் இம்ரான்கான் புகழாரம் சூட்டியுள்ளார்.

பாகிஸ்தானில் கடந்த ஆண்டு நடைபெற்ற பொது தேர்தலில் நவாஸ் ஷெரீப்பின் கட்சி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், அதற்கு பொறுப்பேற்று பிரதமர் பதவியை விட்டு விலக வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரரும் தற்போதைய அரசியல்வாதியுமான இம்ரான்கான் போராடி வருகிறார்.இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இருதரப்பு ராணுவத்துக்கும் இடையே தாக்குதல் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் உள்ள பல்வேறு அரசியல் தலைவர்கள் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், இஸ்லாமாபாத் நகரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாகிஸ்தான் இ இன்சாப் கட்சித் தலைவர் இம்ரான்கான் கலந்து கொண்டார். அப்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் கறுப்பு பண மீட்பு நடவடிக்கைக்கு புகழாரம் சூட்டினார்.வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்பு பணத்தை மீட்பேன் என்று இந்தியாவில் நடைபெற்ற தேர்தலின்போது பிரதமர் நரேந்திர மோடி கூறினார். அதன்படியே, தற்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இத்தகைய நடவடிக்கைகள் மூலம் இந்திய மக்களின் நம்பிக்கையை அவர் பெற்று வருகிறார். அவர்தான் உண்மையான மனிதர் என்று இம்ரான்கான் புகழாரம் சூட்டினார்.
Share it:

Post A Comment:

0 comments: